இரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்

Published By: Priyatharshan

15 Jul, 2019 | 04:19 PM
image

இரண்டு நாட்களுக்கு ஒரு பனிஸ் மாத்திரமே உண்டு, தினமும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் குவைத்துக்கு வீட்டு பணிப்பெண்ணாகச் சென்ற பெண்ணொருவர் நாடு திரும்பியுள்ளார். 

அணிந்திருந்த ஆடையுடன் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ள இவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது. 

குறித்த பெண் எஹெலியகொட பிரசேத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தயான 49 வயதுடைய மாரிமுத்து சுலோசனா என்பவராவார். 

இவர் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் அவர்களின் திருமண செலவிற்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதற்காக குவைத்திற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.  

குவைத் நாட்டில் சாரா என்ற பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கே இவர் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். அங்கு குறித்த ஆசிரியரின் மனைவியால் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை பனிஸ் மாத்திரமே உணவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடுமையான  சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார். 

கூடிய பசி  ஏற்படும் பட்சத்தில் மேலதிகமாக உணவு கேட்கும் போது குறித்த பெண் சுலோசனாவை பாதணிகளால் தாக்கியுள்ளார்.  இவ்வாறு தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் சுலோச்சனாவின் உடல் முழுவதும் உள்ளன. 

மூன்று மாதங்கள் நிறைவடைந்தும் சித்திரவதைகள் தொடர்ந்ததால், சுலோச்சனா தான் பணிபுரிந்து வந்த வீட்டாருக்கு தெரியாமல் குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்கு தப்பிச் சென்று தஞ்சமடைந்துள்ளார். இதன் பின்னர் சுலோச்சனாவை சித்திரவதைக்கு உட்படுத்திய குறித்த பெண்ணும் அவரது கணவரான ஆசிரியரும் இலங்கை தூதரகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  

வீட்டு உரிமையாளர்கள் உறுதியளித்தன் பின்னர் முறையாக உணவு , சம்பளம் என்பவற்றை வழங்குமாறு கூறி தூதரகம் மீண்டும் சுலோசனாவை  அவர்களுடனேயே அனுப்பி வைத்துள்ளது. 

எனினும் சுலோச்சனாவை அழைத்துச் சென்ற குறித்த ஆசிரியரும் அவரது மனைவியும் மீண்டும் தப்பிச் செல்லாதவாறு அறையொன்றில் அடைத்து முன்னரைப் போலவே இரு தினங்களுக்கு ஒரு தடவை பனிஸ் மாத்திரம் வழங்கி துன்புறுத்தியுள்ளனர். 

சுலோச்சனா தனது மாத சம்பளம் குறித்து வீட்டு உரிமையாளர்களிடம் கேட்ட போது , அவரை தலையில் கடுமையாக தாக்கியுள்ளனர். இவ்வாறு பல துன்புறுத்தல்களுக்கு உள்ளான சுலோச்சனா ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில்  நாடு திரும்பினார். 

நாடு திரும்புவதற்கு முன்னர்  இரு வருடத்திற்கான ஊதியம் குறித்து குவைத் விமான நிலையத்தில் வைத்து வீட்டு உரிமையாளர்களிடம் வினாவிய போது , ஏற்கனவே இலங்கைக்கு அனுப்பி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். 

கடந்த இரண்டு வருடங்களாக முறையாக உணவு உற்கொள்ளததால் சுலோசனா உடல் மெலிந்து வலிமையிழந்து இருப்பதோடு, இலங்கை வருவதற்கு முன்னர் டுபாய் விமான நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15