ஜெயவர்தனவின் சாதனையை முறியடித்த வில்லியம்சன்!

Published By: Vishnu

14 Jul, 2019 | 07:37 PM
image

கேன் வில்லியம்சன் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனவின் சாதனையொன்றை இன்றைய போட்டியில் முறியடித்துள்ளார்.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை இலங்கை நேரப்படி 3.10 மணியளவில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணியக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை குவித்துள்ளது.

இப் போட்டியில் நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மொத்தமாக 52 பந்துகளை எதிர்கொண்டு 2 நான்கு ஓட்டம் அடங்கலாக 30 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இவர் இந்த இன்னிங்ஸில் பெற்றுக் கொண்ட 30 ஓட்டம் உள்ளடங்கலாக மொத்தமாக நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.

இதற்கு முன்னர் இப் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன முதல் இடம் பிடித்திருந்தார். இந் நிலையிலேயே கேன் வில்லியம்சன் அந்த சாதனையை முறியடித்துள்ளார். 

ஒருநாள் உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்கள் :

வில்லியம்சன் -549* (2019)

ஜெயவர்த்தனே -548 (2007)

ரிக்கி பொண்டிங் -539 (2007)

ஆர்ரோன் பிஞ்ச் -507 (2019)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58