இலங்கையில் இந்து மதத்தை பாதுகாக்க  இந்து மகாசபை வெகுவிரைவில் நிறுவப்படும் ; மனோ 

Published By: Digital Desk 4

14 Jul, 2019 | 07:09 PM
image

 வெகுவிரைவிலே இலங்கையில் இந்துக்களை கட்டுக் கோப்புக்குள் கொண்டுவரும் முகமாக,  இலங்கை இந்து தேசிய மகாசபை என்ற சட்டத்தை அமைச்சரவை மூலமாக  கொண்டுவந்து, ஆலய அறங்காவலர்களையும், அறநெறிப் பாடசாலை செயற்பாட்டாளர்களையும், மதத் தலைவர்களையும், இந்து மன்றங்களையும், இந்துக் கல்லூரிகளையும், ஒருமுகப்படுத்தும் ஒரு நிறவனமயப்படுத்தப்பட ஒரு மகா சபையை அமைக்கவுள்ளோம். என இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் , இந்து ஆலயங்களை வலுப்படுத்தும் " தெய்வீக சேவைத் திட்டம்" இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.  

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில், 

வரலாற்றில் எப்பொழுதும் இல்லாத முறையிலே எங்கள் அமைச்சின் மூலமாக சமூக மேம்பாடு அம்சத்தின் மூலமாக நாடு முழுவதும் இருக்கக்கூடிய எங்களது வழிபாட்டிடங்களுக்கு இந்து ஆலயங்களுக்கு பொருந் தொகை நிதி வழங்கப்பட்டிருக்கின்றது. எவ்வளவு வழங்கினேன் எவ்வளவு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கினோ அனைத்தும் எழுதிக் கொண்டு வந்து மேடையில் வாசிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. வாங்கியவர்களுக்குத் தெரியும். 

இங்கே சிபார்சு செய்த சித்தார்த்தன், சிறீதரன் எம்.பிக்குத் தெரியும். யாழ்.மாவட்டத்திற்கு மாத்திரம் பல மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இலங்கை வரலாற்றிலே எப்பொழும் இல்லாத முறையிலே பொருந்தொகை நிதி இப்பொழுது தான் இந்து கலாச்சார அமைச்சின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது என்பது  உங்களுக்கு தெரியும். 

ஆகவே இந்த நாட்டில் இந்து ஆலயங்களைப் பொறுத்தவரையில் அறநெறிப் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் இந்து சமூகத்தின் வாழ்வை பொறுத்தவரையில் அரசாங்க கோணத்திலிருந்து பார்க்கும்போது இந்தக் காலகட்டம் ஒரு பொற்கலமாக இருக்கின்றது என்பதை நான் அறிகின்றேன்.

பொற்காலம் இன்னும் பட்டை தீட்டப்பட்டு மிகச் சிறந்த பொற்காலமாக எதிர்காலத்தில் உருவாகிவிடவேண்டும் என விரும்புகின்றேன். கோயில்களுக்கு நிதியை வழங்குதன் மூலம் எங்கள் மதம் வளர்ச்சி அடைந்து விடாது. எழுச்சி பெற்றுவிடாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இந்து சமய விவகார அமைச்சராக நான் பதவியேற்ற பிறகுதான் இந்து சமய கலாச்சார திணைக்களம் என்பது சட்டவலுவற்ற ஒரு திணைக்களம் என்பது என உணர்ந்து கொண்டேன். 

நாளை எந்தவொரு அமைச்சரும் அங்கே வந்தாலும் கூட, அரசாங்கம் வந்தாலும் கூட வேண்டுமென்றால் இந்த திணைக்களத்தை கலைத்து விடலாம். காணமற்போனோர் அலுவலகம் உட்பட எட்டு நிறுவனங்கள் எனது அமைச்சின் கீழ் உள்ளன. இதில் இந்து கலாச்சார திணைகளத்தினை தவிர ஏனைய தினைணக்களங்கள் யாவும் பராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனங்களாக உள்ளன. 

ஆகவே அந்த நிறுவனங்களை நாளை எந்த அரசாங்கம் வந்தாலும்  அகற்றிவிட முடியாது. அமைச்சுக்கள் மாறலாம். ஆனால் திணைக்களம் நிறுவனங்களை அழித்துவிட முடியாது. அந்த தகைமை எங்களுடைய இந்து காலச்சார திணைக்களத்திற்கு இருக்கவில்லை. அந்தவகையில் அதனை வலுவுள்ளதாக்க அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றேன்.

இந்து சமயம் என்பது ஆதியும், அந்தமும் அற்ற சமயம். இது சமயம் மட்டுமல்ல ஒரு நெறி, மார்க்கம். ஒரு தரிசனம். வெறுமனே ஒரு மதம் என்று சொல்லி எங்கள் மதத்தை நான் சிறுமைப்படுத்த விரும்பவில்லை. மதத்தை விட அப்பாற்பட்ட பரந்துவிரிந்த ஒரு தூரதரிசனம். அதுவே சிலவேளைகளில் இந்த நாட்டில் எங்களை சிறுமைப்படுத்துவதற்கு பலருக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது. 

ஏனைய மதங்கள் அனைத்துகட்டுக்கோப்பான மதங்களாக மதத் தலைவர்களின் வழிநடத்தலின் கீழே மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு அவை நிர்வகிக்கப்படும் போது எங்களது இந்து சமயம் அப்படியான நிர்வாகத்தின் கீழ் வரவில்லை. அதன் காரணமாக எங்களை எவருமே வம்புக்கு இழுக்கலாம். எம்வர்களை எவரும் நினைத்த நேரத்திலே எம்மவர்களின் வறியவர்களின் வறுமையை பயன்படுத்தி அறியாதவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி விலைக்கு வாங்கலாம் மத மாற்றத்திற்கு உட்படுத்தலாம் என்ற நிலை இருக்கின்றது. 

அது தடுக்கப்பட வேண்டும் என்றால் எங்களது மதம் ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட மதமாக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். அந்த காரணத்தினால் தான் வெகுவிரைவில் இலங்கையில் இந்துக்களை கட்டுக் கோப்புக்குள் கொண்டுவரும் முகமாக இலங்கை இந்து தேசிய மகாசபை என்ற சட்டத்தை அமைச்சரவை மூலமாக  கொண்டுவந்து  எங்களது இந்து சமயத்தை நடெங்கிலும் உள்ள 25 மாவட்டத்திலும் அனைத்து பிரதேசசபை பிரிவிகளிலும் ஒன்பது மாகணங்களிலும் கட்டுக்கோப்பான மதமாக நிறுவனமயப்படுத்தப்பட்ட மதமாக கொண்டுவர முடிவு செய்திருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47