வெளி­நாட்டு சக்­தி­களின் வேலையா?

Published By: J.G.Stephan

14 Jul, 2019 | 04:51 PM
image

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு வழங்­கி­யதே 21/4 தாக்­கு­தல் ­க­ளுக்குக் காரணம் என்று, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­தாச ராஜபக் ஷ அண்­மையில் கூறி­யி­ருந்தார்.

அம்­பாந்­தோட்­டையை சீனா­வுக்கு வழங்­கி­யதை அமெ­ரிக்கா, இந்­தியா, ஜப்பான் போன்ற நாடுகள் விரும்­ப­வில்லை என்றும் அதனால், இலங்­கையில் ஏதோ ஒரு வகையில் கால் பதிக்க அந்த நாடுகள் முனை­கின்­றன என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.


21/4 தாக்­கு­தல்கள் இடம்­பெற்று மூன்று மாதங்­க­ளா­கியும், இந்த தாக்­கு­தல்­களின்- அடி,முடியைத் தேடும் முயற்­சிகள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. தடுத்து நிறுத்­தப்­பட்­டி­ருக்கக் கூடிய அல்­லது விளை­வு­களை குறைத்­தி­ருக்கக் கூடிய இந்த தாக்­கு­தல்கள் இலங்­கையின் பாது­காப்பு மற்றும் அர­சியல் தலை­மைத்­து­வங்­களின் இய­லா­மை­யினால் தான் மிகவும் சுல­ப­மாகிப் போனது.

இந்தத் தாக்­குதல் பௌதீக ரீதி­யா­கவோ, பொரு­ளா­தார ரீதி­யா­கவோ ஏற்­ப­டுத்­திய தாக்­கங்­க­ளுக்கு அப்பால், எதிர்­பா­ராத பல விளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.சர்­வ­தேச சக்­தி­களின் தலை­யீ­டுகள், செல்­வாக்­கிற்கும் இது வழி­கோ­லி­யி­ருக்­கி­றது. இந்தத் தலை­யீ­டுகள் எதிர்­கா­லத்தில் இலங்­கையில் எவ்­வா­றான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்று அனு­மா­னிக்க முடி­யாது. இந்­த­நி­லையில், தாக்­கு­த­லுக்­கான அடிப்­ப­டை­க­ளையும், நோக்­கத்­தையும் அர­சி­யல்­வா­திகள் தமது வச­தி­க­ளுக்­காக திசை­தி­ருப்ப முனை­கின்­ற­னரோ ? என்ற சந்­தே­கங்கள் எழுந்­துள்­ளன.

விசா­ர­ணைகள் இன்­னமும் முடி­வ­டைய­ வில்லை. விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட உண்­மைகள், கண்­ட­றி­வுகள் இன்­னமும் சரி­யாக பகி­ரங்­க­மா­க­வில்லை. இந்­த­நி­லையில் ஊகங்­க­ளையும் அனு­மா­னங்­க­ளையும் வைத்துக் கொண்டு, இந்த தாக்­கு­தல்­களின் நோக்கம் குறித்து மக்­களைத் திசை­தி­ருப்ப முனை­கி­றார்கள் அர­சி­யல்­வா­திகள்.இதன்­மூலம், யாரையோ காப்­பாற்­று­வ­தற்கு, உள்­நாட்டு அர­சியல் சக்­திகள் சில முயற்­சிக்­கின்­ற­னவோ என்ற சந்­தே­கமே எழு­கி­றது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு வழங்­கி­யதே 21/4 தாக்­கு­தல்­க­ளுக்குக் காரணம் என்று, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­தாச ராஜபக் ஷ அண்­மையில் கூறி­யி­ருந்தார்.

அம்­பாந்­தோட்­டையை சீனா­வுக்கு வழங்­கி­யதை அமெ­ரிக்கா, இந்­தியா, ஜப்பான் போன்ற நாடுகள் விரும்­ப­வில்லை என்றும் அதனால், இலங்­கையில் ஏதோ ஒரு வகையில் கால் பதிக்க அந்த நாடுகள் முனை­கின்­றன என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்தக் கருத்தின் படி, சீனா­வுக்குப் பதி­லாக இலங்­கையில் கால்­ப­திக்க முனையும் நாடு­களின் செல்­வாக்கு இந்த தாக்­கு­தல்­களில் இருந்­தி­ருக்க வேண்டும் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். அதே­வேளை, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச்­செ­ய­ல­ரான தயா­சிறி ஜய­சே­கர, இந்த தாக்­கு­தலை நடத்­தி­யது, ஐ.எஸ். அமைப்பு அல்ல என்றும், வெளி­நாட்டு சக்தி ஒன்றே இதனை செய்­துள்­ளது என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

அவர் ஊட­கங்­க­ளிடம் பேசிய போது, கூறிய விதத்­துக்கும் தெரி­வுக்­குழு சாட்­சி­யத்தின் போது கூறிய விதத்­துக்கும் இடையில் வேறு­பாடு உள்­ளது. இலங்­கையில் கால் வைக்க பல நாடுகள் முயற்­சிக்­கின்­றன என்ற அடிப்­ப­டையில் தான்,  சஹ்­ரானைப் பயன்­ப­டுத்தி அந்த நாடுகள் தமது நோக்­கத்தை நிறை­வேற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன என்று தாம் சந்­தே­கிப்­ப­தாக அவர் கூறி­யி­ருக்­கிறார். கண்ணால் காண்­பதும் பொய், காதால் கேட்­பதும் பொய், தீர விசா­ரித்து அறி­வதே மெய் என்ற கூற்றைப் புறந்­தள்ளி விட்டு ஊகங்­க­ளையும், தமது கருத்­துக்­க­ளையும், இந்த விட­யத்தின் பேசு­பொ­ரு­ளாக மாற்ற முனை­கின்­றனர் அர­சி­யல்­வா­திகள்.பூகோள அர­சியல், உலக நடப்­புகள் எல்லாம் உதா­ர­ணங்­க­ளாக இருந்­தாலும், அதே விதி இலங்­கை­யிலும் பொருந்த வேண்டும் என்­பது நிய­தியும் இல்லை. அவ்­வாறு நோக்­கு­வது புத்­தி­சா­லித்­த­ன மும் அல்ல. இலங்­கையில் கால் வைப்­ப­தற்­காக இப்­ப­டி­யொரு தாக்­கு­தலை

ஒரு வெளி­நாட்டு சக்தி மேற்­கொண்­டி­ருந்தால், இந்த மூன்று மாத காலத்தில் அந்த சக்தி எத்­த­கைய அடைவை பெற்­றி­ருக்­கி­றது என்று ஆராய வேண்­டி­யது முக்­கியம். அதனைச் செய்­யாமல் எழுந்­த­மா­ன­மாக முடி­வு­களை எடுப்­பது முட்­டாள்­தனம்.21/4 தாக்­கு­தல்கள் என்­பது இலங்­கையைப் பொறுத்­த­வரை, முக்­கி­ய­மா­ன­தொரு பாடம். விடு­தலைப் புலி­களின் ஆயுதப் போராட்­டத்­தையே தோற்­க­டித்து விட்ட இறு­மாப்பில் இருந்து இலங்­கையின் பாது­காப்புக் கட்­ட­மைப்­பு­க­ளையே நிலை­கு­லைய வைத்து விட்ட தாக்­குதல் இது. இது­போன்ற தாக்­கு­தல்கள் நடப்­ப­தற்கு இன்­னமும் வாய்ப்­புகள் இருப்­பதை மறுப்­ப­தற்­கில்லை என்றே, இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க இப்­போது கூறு­கிறார்.

தாக்­குதல் நடந்த நாளில் இருந்தே, இதனை பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா கூறி வந்­தி­ருக்­கிறார். ஆனால் அதைப் பற்றி யாரும் கரி­சனை கொள்­வ­தில்லை.

இப்­ப­டி­யான நிலையில், நடந்து விட்ட தாக்­கு­தல்­களில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டு, அதற்குக் கார­ணி­யான விட­யங்­களை அகற்­று­வது தான் புத்­தி­சா­லித்­தனம். இலங்­கையின் அர­சி­யல்­வா­திகள் எப்­போ­துமே, தவ­று­களில் இருந்து பாடம் கற்­ப­வர்­க­ளில்லை. அவ்­வாறு பாடம் கற்­ப­வர்­க­ளாக இருந்­தி­ருந்தால், போருக்குப் பின்னர் நிலை­யான அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­மு­றை­களைத் தேடி­யி­ருப்­பார்கள்.  21/4 தாக்­கு­தல்­களின் அடிப்­ப­டை­களை கண்­ட­றி­வ­தையும் இவர்கள் விரும்­பு­வ­தா­கவும் தெரி­ய­வில்லை. அதற்கு மாறாக, பூகோள அர­சியல் அனு­ப­வங்­களை மட்டும் வைத்துக் கொண்டு, அனு­மா­னங்­களின் அடிப்­ப­டையில் விசா­ர­ணை­க­ளையும் பொது­மக்­க­ளையும் திசை திருப்­பு­வதில் இறங்­கி­யுள்­ளார்கள்.

ஏனென்றால், தமது அர­சியல் இருப்­புக்கும், நல­னுக்கும் அவர்­க­ளுக்கு இது­போன்ற முடி­வுகள் தேவைப்­ப­டு­கின்­றன. அதை­விட தவ­று­களை மறைக்­கின்ற தேவை­களும் அவர்­க­ளுக்கு உள்­ளன. இது ஐ.எஸ். அமைப்பின் கைவ­ரிசை இல்லை என்றும் சர்­வ­தேச சக்தி ஒன்றின் வேலை தான் என்றும், கூறு­ப­வர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு நெருக்­க­மா­ன­வர்கள் என்­பதைக் கவ­னிக்க வேண்டும். இந்த தாக்­கு­தல்­க­ளுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொறுப்­புக்­கூற வேண்டும் என்ற கருத்தே பெரும்­பா­லா­ன­வர்­க­ளிடம் உள்­ளது. அவ­ரிடம் தான், பாது­காப்பை உறுதி செய்­தி­ருக்க வேண்­டிய முழுப் பொறுப்பும் இருந்­தது.

ஆனால் அவர் அதனை அலட்­சி­ய­மாக எடுத்துக் கொண்டார். எல்லாம் நடந்து முடிந்த பின்னர், தனக்குக் கீழ் இயங்­கி­ய­வர்­களின் தலை­களை உருட்டி, பழி­களை அவர்­களின் மீது போட்டார். ஜனா­தி­ப­தியை இந்தக் குற்­றச்­சாட்­டு­களில் இருந்து விடு­விப்­ப­தற்­காக, சர்­வ­தேச சக்­தி­களின் தலையில் பொறுப்பை சுமத்­து­வ­தற்கும் முயற்­சித்­தி­ருக்­கலாம். அது­போ­லவே, இந்த தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரி­க­ளி­னது அடிப்­படை இலக்கு என்ன என்­பதை தெளி­வாக கண்­ட­றிந்து, அதற்கு சரி­யான மருந்தை தடவத் தவ­றினால், மீண்டும் மீண்டும் பாடங்­களைக் கற்க வேண்­டிய நிலையே ஏற்­படும்.

இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் இலங்­கையில் தான்­தோன்­றித்­த­ன­மாக வள­ர­வில்லை. அது வெறு­மனே ஐ.எஸ் தொடர்­பி­னாலோ, அல்­கு­வைதா தொடர்­பி­னாலோ உரு­வா­னதும் அல்ல. இஸ்­லா­மிய மார்க்க போத­னையின் விளைவும் அல்ல. இஸ்­லா­மிய நாடுகள் பல­வற்றில் பல தசாப்­தங்­க­ளாக ஆயுதப் போராட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. ஜிஹாத், தலிபான், அல்­கு­வைதா என்று பல  சக்­தி­வாய்ந்த இஸ்­லா­மிய ஆயுத அமைப்­புகள் உலகின் கவ­னத்தை ஈர்த்த போதும், அவற்றின் தாக்கம் இலங்­கையில் அப்­போ­தெல்லாம் இருக்­க­வில்லை. 2009ஆம் ஆண்­டுக்குப் பின்னர், இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நிகழ்த்­தப்­பட்ட வன்­மு­றைகள் தான், இதில் அதிக தாக்கம் செலுத்­தி­யி­ருக்­கி­றது என்­பதை கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் அளுத்­கம வன்­மு­றைகள் நிகழ்ந்­தன. தற்­போ­தைய ஆட்­சிக்­கா­லத்தில் கண்டி வன்­மு­றைகள் இடம்­பெற்­றன. இவற்றின் எதி­ரொ­லி­யாக இதற்குப் பதி­லடி கொடுக்க வேண்டும் என்ற சிந்­த­னையும் கூட, இந்த தீவி­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்கு காரணம் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. இந்தக் கார­ணி­களை மறந்து விட்டு அல்­லது மறுத்து விட்டு முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணை­களால் எந்தப் பாடத்­தையும் கற்க முடி­யாது,

ஒரு­வேளை, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நிகழ்த்­தப்­பட்ட வன்­மு­றை­களை மறைப்­ப­தற்­காக அத்­த­கைய வன்­மு­றை­களால் தான் அவர்கள் திருப்பித் தாக்கும் நிலை ஏற்­பட்­டது என்­பதால், வன்­மு­றை­க­ளுக்கு பொறுப்­புக்­கூ­று­வதில் இருந்து தப்­பிக்கும் நோக்­குடன், வெளி­நாட்டு சக்தி பற்­றிய புர­ளி­களை கிளப்ப முனைந்­தி­ருக்­கலாம். சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தத்தின் கோர­மு­கத்தின் உண்­மை­யான தோற்­றத்தை மறைப்­ப­தற்­காக, அதன் விளை­வா­கவே, இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் முனைப்புப் பெற்­றது என்ற உண்­மையை மறைப்­ப­தற்­காக வெளி­நாட்டு சக்­திகள் என்ற குண்டைத் தூக்கிப் போட்டு விட்டு தப்பிக்க அரசியல்வாதிகள் முனையலாம்.

வெளிநாட்டு சக்திகள் இவ்வாறான தாக்குதல்கள், சம்பவங்களில் ஒருபோதும் தொடர்புபடுவதில்லை என்றோ, இந்த தாக்குதலுடன் அவர்களுக்குத் தொடர்பு இல்லை என்றோ யாரும் வாதிட முடியாது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும், ஜனாதிபதியை பதவியிறக்கவும் தான்  வெளிநாட்டு சக்தியால், இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்று தயாசிறி ஜயசேகர கூறியிருக்கிறார். உலக நடப்புகளில் இதுபோன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன என்பது உண்மை தான். அவற்றை மாத்திரம் வைத்துக் கொண்டு இந்தச் சம்பவத்தையும் அவ்வாறே கருதுவது தான் ஆபத்தானது.

இதுதான் சரி என்று, சரியான விசாரணைகளின்றி வெறும் ஊகங்களின் அடிப்படையில் முடிவெடுப்பது தவறான அணுகுமுறை.

ஏனென்றால், இதுபோன்ற சம்பவங்கள் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு இந்த முற்கணிப்புகள் உதவாது. அரசியல்வாதிகள் தம்மைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்தே அது உதவும்.

- கார்­வண்ணன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49