சுகாதார அமைச்சினால், லேபலை மாற்றி நோயாளிகளுக்கு போலி மருந்து...?: சிறுவர்களுக்கான மருந்தும் உள்ளடக்கம்

Published By: J.G.Stephan

14 Jul, 2019 | 11:35 AM
image

அங்கீகரிக்கப்படாத பல மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்து, அதில் உள்ள லேபலை மாற்றி புதிய மருந்தாக சுகாதார அமைச்சினால் வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படுவதாக வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுரந்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சு போலி மருந்துகளை வைத்தியசாலைக்கு விநியோகித்து, நோயாளர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  



இந்த மருந்து வகைகளில் சிறுவர்களுக்கு வழங்கும் மருந்து வகைகளும் உள்ளடங்கியுள்ளன. இந்த ஊழல் செயற்பாடு குறித்து, ஜனாதிபதி உள்ளிட்ட அரச முக்கியஸ்தர்களுக்கு 11 தடவைகள் முறையிட்ட போதிலும், இது குறித்து, எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்தப் போலி மருந்து கொள்வனவினால், நாட்டிற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது மத்திய வங்கியின் பிணை முறிகள் மோசடியைவிட பாரதூரமானதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


-நன்றி திவயின-

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14