ஷரீஆ வங்கிச் சட்­டங்­கள் உள்வாங்க வேண்டும்.!

Published By: Robert

06 May, 2016 | 09:09 AM
image

இஸ்­லா­மிய ஷரீஆ வங்கிச் சட்­டங்­களை உள்­வாங்­க வேண்­டு­மென மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லா கோரிக்கை விடுத்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்தினம் புதன்­கி­ழமை நுண்­நி­தி­ய­ளிப்பு சட்ட மூலத்தின் இரண்டாம் மதிப்­பீடு மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

நுண்­நிதி அளிப்பு சட்ட மூலம் கொண்டு வரப்­பட்­ட­மைக்கு நாம் வர­வேற்­ப­ளிக்­கின்றோம். இலங்கை மத்­திய வங்­கிக்கு கீழ் நுண்­நி­தி­ய­ளிப்பு நிறு­வ­னங்கள் பதிவு செய்­யப்­பட்­டாலும் அவை தமக்கு விரும்­பி­ய­வாறே செயற்­ப­டு­கின்­றன. இதனால் சாதா­ரண பொது மக்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங் கொடுக்­கின்­றனர்.

இவ்­வா­றான நிறு­வ­னங்கள் முதலில் சாதா­ரண கிரா­மங்­களை நோக்­கியே வரு­கின்­றன. சூட்­சு­மாக கடன்­களை வழங்­கு­கின்­றன. அதன் பின்னர் அவர்­களை கடன்­கா­ரர்­க­ளாக மாற்றி நெருக்­க­டிக்குள் தள்ளி விடு­கின்­றன. இதனால் சாதா­ரண பொது மக்கள் தற்­கொலை செய்து கொள்ளும் நிலை­மைகள் ஏற்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மட்டும் இவ்­வா­றான நுண்­நிதி கடன் வழங்கும் நிறு­வ­னங்­க­ளினால் மூன்று பெண்கள் தற்­கொலை செய்து கொண்ட துக்­க­க­ர­மான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. இவ்­வா­றான நிலை­மை­களை தொடர்ந்தும் அனு­ம­திக்க முடி­யாது. அந்த நிலை­மைகள் தடுத்து நிறுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. அதற்­காக இவ்­வா­றான சட்ட மூலம் கொண்டு வந்­தி­ருப்­பது வர­வேற்­கப்­பட வேண்­டி­ய­தாகும்.

விசே­ட­மாக வட கிழக்கில் பல்­வேறு வாழ்­வா­தார உத­வி­களை, தேவை­களைக் கொண்ட ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் உள்­ளனர். அவர்­களின் வாழ்­வா­தாரம் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வேண்­டுமே தவிர அவர்­களின் நெருக்­க­டி­களை மேலும் அதி­க­ரிப்­ப­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. கிரா­மிய மட்­டத்­தி­லான பொரு­ளா­தார நிலை­மை­களைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதன் ஊடா­கவே நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்த முடியும். ஆகவே கிரா­மிய மட்­டத்தில் உள்ள மக்­களின் வரு­மானம் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்ட மூலம் பாரிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். மேலும் இஸ்லாமிய ஷரீஆ வங்கிச் சட்டங்களை இச்சட்டமூலத்தில் கவனத்தில் கொண்டு உள்வாங்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22