கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு  தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம் : கூட்டமைப்பு விளக்கம்

Published By: R. Kalaichelvan

13 Jul, 2019 | 01:32 PM
image

(எம்.மனோசித்ரா)

தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. 

எனவே இது போன்று கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மையமாகக் கொண்டு தான் ஜே.வி.பி நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தது என்றால் முதலில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையையே கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி பாராளுமன்றத்தில் சமர்பித்த நம்பிக்கையில்லா பிரேணைக்கு கூட்டமைப்பு எதிராக வாக்களித்தமை தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

மக்கள் விடுதலை முன்னணியோ அல்லது வேறு எந்த கட்சியோ யாராக இருந்தாலும் அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்பிக்கும் பிரேரணைகள் அனைத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் கிடையாது. 

இது போன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுக் கொடுக்கவே நாம் முயற்சிக்கின்றோம்   என  அவர்  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21