அரச ஊழி­யர்கள், கலை­ஞர்கள், வர்த்­த­கர்­க­ளுக்கு எதி­ராக 2015 ஆம் ஆண்டு 256 முறைப்­பா­டுகள் பொலிஸ் நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு கிடைக்கப் பெற்­றுள்ள நிலையில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக தென்­மா­காண மற்றும் சட்டம் ஒழுங்­குகள் அமைச்சர் சாகல ரட்­நா­யக்க சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்றில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற வாய்­மூல விடைக்­கான வினாவின் போது ஐக்­கி­ய­ மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிர­சன்ன ரண­துங்க எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் சாகல ரட்­நா­யக்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

2015 ஜன­வரி 08 ஆம் திகதி முதல் 31 டிசம்பர் 2015 வரை­யி­லான காலப்­ப­கு­தியில் அரச ஊழி­யர்­க­ளுக்கு எதி­ராக 114 முறைப்­பா­டு­களும் கலை­ஞர்­க­ளுக்கு எதி­ராக 05 முறைப்­பா­டு­களும் வர்த்­த­கர்­க­ளுக்கு எதி­ராக 137 முறைப்­பா­டு­களும் பொலிஸ் நிதிக் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு கிடைத்­துள்­ளன. அந்த முறைப்­பா­டுகள் மீதான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இருப்­பினும் அவை முழு­மை­யாக நிறை­வே­றா­மையின் கார­ண­மாக குறித்த நபர்கள் தொடர்­பான விப­ரங்­களை வெளி­யிட முடி­யாது எனக் கூறினார்.

இதன்­போது பிர­சன்ன ரண­துங்க எம்.பி. நீங்கள் கூறு­வதை நான் ஏற்றுக் கொள்­கின்­ற­போதும் பத்­தி­ரி­கை­களில் பெயர்கள் வெளி­வ­ரு­கின்­றன. அதனை நீங்கள் நிறுத்த வேண்டுமென கோரினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பத்திரிகைகளில் பெயர்கள் வெளிவருவதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்றார்.