வாக்­க­ளிக்கும் போது கையடக்கத் தொலைபேசியில் செல்பி மற்றும் புகைப்­படம் எடுக்­கக்­கூ­டாது. இவற்றை மீறி எடுத்தால் அவர்கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தெரி­விக்­கப்பட்­டுள்­ளது.

தமி­ழக சட்­ட­மன்ற தேர்தல் எதிர்­வரும் 16ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இதில் தேர்தல் நடத்தை விதி­மு­றை­களை தேர்தல் ஆணையம் தீவி­ர­மாக கண்­கா­ணித்து வரு­கி­றது. இந்­நி­லையில் தேர்தல் ஆணையம் பொதுத்­தேர்தல் பார்­வை­யா­ளர்­களை நிய­மித்­துள்­ளது.

வேலூர் மாவட்­டத்தில் உள்ள 13 சட்­ட­மன்ற தொகு­தி­களில் தேர்தல் நடத்தும் அலு­வ­லர்­களின் தலை­மையில் அனைத்­துக்­கட்சி ஆலோ­சனைக் கூட்டம் நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய பொதுத்­தேர்தல் பார்­வை­யா­ளர்கள் வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிக்கும் போது செல்பி எடுத்தால் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.