இந்­தோ­னே­சி­யா­வுக்கு மேலாக பறந்த எதிஹாட் எயார்வேய்ஸ் விமா­னத்தில் ஏற்­பட்ட கடு­மை­யான குலுக்­கத்தால் 31 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

அபு­தா­பி­யி­லி­ருந்து புறப்­பட்ட மேற்­படி எயார்பஸ் ஏ330 – 200 விமானம் இந்­தோ­னே­சிய ஜகர்த்தா நக­ரி­லுள்ள சோகர்னோ ஹத்தா சர்­வ­தேச விமான நிலை­யத்தில் தரை­யி­றங்க 45 நிமிட நேரம் இருந்த நிலை­யி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

அந்த விமானம் கடு­மை­யாக குலுங்க ஆரம்­பித்­ததும் அதி­லி­ருந்த பய­ணிகள் அச்சம் கார­ண­மாக அழுது கூச்­ச­லிட ஆரம்­பித்துள்ளனர்.

இதன்­போது விமா­னத்­திற்குள் இருந்த பொருட்கள் அங்­கு­மிங்கும் தூக்கி வீசப்­பட்­ட­துடன் விமா­னத்தின் உள்­ளே­யி­ருந்த பொதி­களை வைப்­ப­தற்­கான கட்­ட­மைப்­பு­க­ளுக்கும் சேதங்கள் ஏற்­பட்­டுள்­ளன..

அது­மட்­டு­மல்­லாது விமா­னத்தின் உட்­பக்க கூரைப் பகு­தி­யிலும் வெடிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன.

எனினும் அந்த விமானம் பாது­காப்­பாக ஜகர்த்தா விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது.

காய­ம­டைந்­த­வர்­களில் 9 பய­ணிகள் மற்றும் விமான ஊழியர் ஒருவர் உட்­பட 10 பேர் தொடர்ந்து மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்று வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் அந்த விமா­னத்தின் டுபாய்க்கு திரும்­பு­வ­தற்­கான பயணம் இரத்துச் செய்­யப்­பட்டு அதில் பயணம் செய்ய பதிவு செய்­த­வர்­க­ளுக்கு வேறு விமானங்களில் பயணங்களை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.