வைத்தியர் ஷாபி விவகாரம்: நீதிமன்றில் நடந்தது என்ன?

Published By: Digital Desk 3

12 Jul, 2019 | 11:55 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் விசா­ரிக்­கப்­பட்டு வந்த குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவின் வைத்­தியர் சேகு சிகாப்தீன் மொஹமட் ஷாபியை எதிர்­வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறி­யலில் வைக்­கு­மாறுகுரு­ணாகல் நீதிவான் நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது. வைத்­தியர் ஷாபி தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று குரு­ணாகல் பிர­தான நீதிவான் சம்பத் ஹேவா­வசம் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­த­போதே அவர் இந்த உத்­த­ரவை பிறப்­பித்தார். 

பயங்­க­ர­வாத , அடிப்­ப­டை­வாத குழுக்­க­ளோடு தொடர்­பு­பட்டு சட்­ட­வி­ரோ­த­மாக சொத்து சேர்த்­தமை, சட்ட விரோ­த­மான முறையில் சிங்­கள பெண்­க­ளுக்கு கருத்­தடை செய்­த­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் வைத்­தியர் ஷாபி கடந்த மே மாதம் 24 ஆம் திகதி பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டார். 

அன்று முதல் தடுத்து  வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வந்த ஷாபி நேற்று முதன் முத­லாக நீதவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார். குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் விஷேட ஜீப் வண்­டியில் கொழும்­பி­லி­ருந்து குரு­ணா­க­லுக்கு அழைத்து வரப்­பட்ட வைத்­தியர் ஷாபி குரு­ணாகல் சட்ட வைத்­திய அதி­காரி முன்­னி­லையில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் முற்­பகல் 10.40 மணி­ய­ளவில் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டார். 

இதன்­போது குரு­ணாகல் நீதி­மன்றம் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் விஷேட பொலிஸ் மற்றும் அதி­ர­டிப்­படை பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.  வைத்­தியர் ஷாபியை குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் பொலிஸ் அத்­தி­யட்சர் ஜய­சிங்க , உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் டி.எஸ்.திஸேரா , பொலிஸ் பரி­சோ­தகர் இலங்­க­சிங்க உள்­ளிட்ட குழு­வினர் மன்றில் ஆஜர்­ப­டுத்­தினர். 

சீ.ஐ.டியி­ன­ருக்கு கூடுதல் பலம் சேர்க்க சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி  சொலி­சிட்டர் ஜெனரால் துஷித் முத­லிகே மன்றில் ஆஜ­ரானார். சந்­தே­க­ந­ப­ரான வைத்­தியர் சாபி சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அநுர மெத்­தே­கொ­டவின் கீழ் சிரார்த் நூர்தீன் சப்ராத் அம்சா, நதீஷா கண்­டம்பி, பிரே­ம­ரத்ன உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் குழு ஆஜ­ரா­னது. 

சட்ட விரோத கருத்­த­டைக்கு உள்­ளா­ன­தாகக் கூறப்­படும். முறைப்­பா­ட­ளித்­துள்ள தாய்மார் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யு.ஆர்.டி.சில்வா தலை­மையில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மொஹான் சென­வி­ரத்ன, சட்­ட­த­ர­ணி­க­ளான சேனா­ரத்ன , சானக உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர். முதலில் முற்­பகல் வேளையில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட வழக்கு ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அநுர மெத்­தே­கொ­டவின் வரு­கையை மையப்­ப­டுத்தி பிற்­பகல் 1.30 வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் மீள வழக்­கா­னது பிற்­பகல் 2 மணிக்கே விசா­ர­ணைக்கு வந்­தது. 

முதலில் மன்றில் விசா­ர­ணையின் மேல­திக அறிக்­கையை சீ.ஐ.டி சமர்ப்­பித்­தது. அத­னை­ய­டுத்து முறைப்­பாட்­டாளர் தரப்­பான விசா­ர­ணை­யாளர் தரப்பில் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்ட ஜெனரால் துஷித் முத­லிகே விட­யங்­களை மன்­றுக்கு தெளி­வு­ப­டுத்­தினார்.

 அவர் தெ ளிவு­ப­டுத்­து­கையில்,

' இந்த விவ­காரம் தொடர்பில் குரு­ணாகல் பொலிஸார் மூன்று குற்­றச்­சாட்­டுக்­களை மையப்­ப­டுத்தி வைத்­தியர் சாபியை பயங்­க­ர­வா­ததத் தடைச்­சட்­டத்தின் கீழ் கடந்த மே 24 ஆம் திகதி கைது செய்­தி­ருந்­தனர். இந்­நி­லை­யி­லி­லேயே சீ.ஐ.டியினர் அவரைப் பொறுப்­பேற்று மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். குறிப்­பாக சீ.ஐ.டி முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் வைத்­தியர் ஷாபிக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டி­ருந்த பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளு­ட­னான தொடர்பு மற்றும் வரு­மா­னத்தை மீறிய சொத்து குவிப்பு தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் நீண்ட விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. பயங்­க­ர­வாத தொடர்­புகள் குறித்து பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் இடம்­பெற்ற விசா­ர­ணை­களில் அக்­குற்­றச்­சாட்டு எந்த அடிப்­ப­டையும் அற்­றது என்­பது தெளி­வா­கி­யது. சொத்து குவிப்பு தொடர்பில் பணச்­ச­லவை சட்­டத்தின் கீழ் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. இது வரை­யி­லான விசா­ர­ணை­களில் அந்த குற்­றச்­சாட்டு தொடர்­பிலும் நியா­ய­மான சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்தும் எந்த விட­யங்­களும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்தின் கீழ் வைத்­தியர் சாபியை தொடர்ந்து தடுத்து வைப்­பது பொருத்­த­மற்­றது. அது தொடர்பில் பாது­காப்பு அமைச்­சுக்கு அறி­விக்­கப்­பட்ட நிலையில் நேற்று முன்­தினம் அவ­ரது தடுப்பு காவல் உத்­த­ரவு இரத்து செய்­யப்­பட்­டது. அதன்­ப­டியே இன்று (நேற்று) அவரை நாம் இம்­மன்றில் ஆஜர் செய்­கிறோம். அதே நேரம்  வைத்­தி­ய­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள மூன்­றா­வது குற்­றச்­சாட்­டான சட்ட விரோத கருக்­கலை தொடர்பில் நீண்ட விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. குற்­ற­வியல் சட்­டத்தின் 32 (1) ஆம் பிரி­வின்­படி ஒரு குற்­றச்­சாட்டு தொடர்பில் நியா­ய­மான சந்­தே­கங்­களை தோற்­று­விக்கும் கார­ணிகள் இருப்பின் மட்­டுமே அக்­குற்­றச்­சாட்டு தொடர்பில் சந்­தே­க­நபர் ஒருவர் கைது செய்­யப்­பட முடியும். இதுவே சட்டம். எனினும் வைத்­தியர் சாபி விவ­கா­ரத்தில் இது வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் நியா­ய­மான சந்­தே­கங்­களை தோற்­று­விக்கும் எவ்­வித கார­ணி­களும் சீ.ஐ.டிக்கு கிடைக்­க­வில்லை. இந்­நி­லையில் நியா­ய­மான சந்­தே­கத்­துக்கு அப்­பா­லேயே வைத்­தியர் சாபி குரு­ணாகல் பொலி­ஸாரால் ஆரம்­பத்தில் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். எது எவ்­வா­றா­யினும் சிசே­ரியன் சத்­திர சிகிச்­சை­களின் இடையே சட்ட விரோத கருத்­தடை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டு தொடர்பில் நீண்ட விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. முறைப்­பாட்­ட­ளர்­களின் முறைப்­பா­டு­க­ளுக்கு அமை­வாக தற்­போ­தைக்கு தண்­டனை சட்­டக்­கோ­வையின் 311 (4) ஆம் பிரிவின் கீழ் காயம் ஏற்­ப­டுத்­து­த­லுடன் தொடர்­பு­டைய விட­ய­மாகக் கருதி  விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இந்த விசா­ர­ணை­களை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்ய அறி­வியல் ரீதி­யி­லான பரி­சோ­த­னைகள் மிக அவ­சி­ய­மா­ன­தாகும். அவ்­வா­றான அறி­வியல் ரீதி­யி­லான பரி­சோ­த­னை­க­ளி­லேயே இந்த விசா­ரணை தங்­கி­யுள்­ளது.  

ஏற்­க­னவே இந்த நீதி­மன்றம் இவ்­வி­சா­ர­ணைகள் தொடர்பில் ஆலோ­சனை வழங்க கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி அஜித் தென்­னகோன் காசல் வைத்­தி­ய­சா­லையில் பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­திய நிபுனர் ருவன் பத்­தி­ரன டீ சொய்சா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­திய நிபுனர் ஜே.கரு­ணா­சிங்க ஆகியோர் அடங்­கிய விஷேட நிபு­னர்கள் குழுவை நிய­மித்­துள்­ளது. அக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களின் பிர­காரம் முறைப்­பா­ட­ளித்த 615 பேரில் 147 பேரை எஸ்.எச்.ஜி. பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. அந்த பரி­சோ­த­னை­களின் முடிவை அடுத்தே எம்மால் மேல­திக நட­வ­டிக்கை எடுப்­பது குறித்­தான முடி­வு­க­ளுக்கு வர முடியும். கடந்த தவ­ணையின் போது இந்த எச்.எச்.ஜீ சோத­னை­களை முன்­னெ­டுக்க பாதிக்­கப்­பட்ட தரப்பின் கோரிக்­கையை ஏற்று நீதி­மன்றம் தடை விதித்­தது. எனினும் அத்­த­டையை தளர்த்தி அந்த சோத­னை­களை முன்­னெ­டுக்க அனு­ம­தி­ய­ளிக்க வேண்டும். அப்­போதே இந்த விசா­ர­ணை­களை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்க முடியும்' என்றார். 

இத­னை­ய­டுத்து சந்­தே­க­நபர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அநுர மெத்­தே­கொட பிணை கோரிக்­கையை முன்­வைத்தார். 

அவர் கோரிக்­கையை முன்­வைக்­கையில், 

' எந்த நியா­ய­மான சந்­தே­கங்­களும் இன்றி எனது சேவை பெறுநர் கைது செய்­யப்­பட்டு கடந்த இரு மாதங்­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். அவ­ரது கைது சட்ட விரோ­த­மா­னது. தடுப்பு காவல் உத்­த­ரவு தற்­போது வாபஸ் பெறப்­பட்­டுள்­ளது. எந்த குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கும் இது வரை சாட்­சி­யங்கள் இல்லை என்­பது விசா­ரணை அறிக்­கை­களின் பிர­காரம் தெளி­வா­கின்­றது. எனவே எனது சேவை பெறு­ந­ருக்கு பிணை வழங்­கு­வது தொடர்பில் பிணைச்­சட்­டத்தின் விதி­வி­தா­னங்கள் குறித்து  கவனம் செலுத்த வேண்டும். அதில் பிணை மறுப்­ப­தற்­கான கார­ணி­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் விட­யங்கள் எவையும் எனது சேவை பெறுநர் விட­யத்தில் தொடர்­பற்­றது. இந்த வழக்கு நீடிக்­கப்­பட்­டது. ஊட­கங்­க­ளு­டாக வளர்க்­கப்­பட்­டது. சட்ட ரீதி­யாக எவ்­வித குற்­றமும் சுமத்த கார­ணிகள் இல்­லாத நிலையில் அவரை தடுத்து வைப்­பது நியா­ய­மற்­றது. எனவே எந்­த­வொரு நிபந்­த­னையின் அடிப்­ப­டை­யிலும் அவ­ருக்கு பிணை வழங்­கு­மாறு கோரு­கிறேன். அத்­துடன் குறிப்­பாக எனது சேவை பெறு­நரின் குற்­ற­மற்ற தன்­மையை நிரூ­பிப்­ப­தற்­கா­கவும் இந்த விசா­ர­ணை­களின் வெற்­றி­க­ர­மான முன்­னேற்­றத்­திற்­கா­கவும் கோரப்­பட்­டுள்ள எஸ்.எச்.ஜீ பரி­சோ­த­னை­களை அவ­சியம் முன்­னெ­டுக்க வேண்டும் என்­பதே எமுத கோரிக்­கை­யாகும். பிறப்­பு­றுப்­பூ­டாக ஒரு வகை சாயத்தை உட்­செ­லுத்தி பலோ­பியன் குழாய்­களை ஊட­றுத்து அதனை கற்பப் பை வரை செலுத்தும் இந்த எஸ்.எச்.ஜீ சோதனை இவ்­வி­சா­ர­ணை­களில் திருப்­பத்தை ஏற்­ப­டுத்தும். இத­னூ­டாக பலோ­பியன் குழாய்­களில் தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு சட்ட விரோத கருத்­தடை இடம்­பெற்­றுள்­ளதா என்­பதை கண்­ட­றிய முடியும்' என்றார். 

இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட தரப்பின் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யு.ஆர்.டி.சில்வா , ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மொஹான் சில்வா, சட்­டத்­த­ர­ணி­க­ளான சேனா­ரத்ன மற்­றும சானக ஆகியோர் கருத்­துக்­களை மன்றில் முன்­வைத்­தனர். அவர்கள்  வைத்­தி­யரை பிணையில் விடு­விப்­ப­தற்கு எதிர்ப்பு தெரி­வித்­த­துடன், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் பெறப்­பட்ட தடுப்பு காவலை வாபஸ் பெற்­ற­மையை வன்­மை­யாக எதிர்த்­தனர். சீ.ஐ.டி விசா­ர­ணைகள் பக்­கச்­சார்­பாக இடம்­பெ­று­வ­தாகக் கூறிய அவர்கள் அதனை சீ.ஐ.டியின் சமூக கொள்ளை விசா­ரணை அறை­யி­லி­ருந்து வேறு ஒரு விசா­ரணை பிரி­விற்கு மாற்­று­மாறும் கோரினர். 

'இந்த விசா­ர­ணைகள் சரி­யான கோணத்தில் நடக்­கி­றதா? என்­பது தொடர்பில் பாரிய சந்­தேகம் உள்­ளது. குற்­றப்­பு­லான்­வுப்­பி­ரிவு வைத்­தியர் சாபிக்கு சார்­பா­கவே விசா­ரணை அறிக்­கையை சமர்ப்­பித்து அவரை குற்­ற­வா­ளி­யாகக் காட்ட முனை­கி­றது. பிணை சட்­டத்தின் கீழ் பிணை மறுப்­ப­தற்­கான கார­ணிகள் ஏராளம் உள்­ளன. குறிப்­பாக வைத்­தியர் சாபி வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்த விட­யத்தில் பல சொத்­துக்­களை கொள்­வ­னவு செய்ய தர­க­ராக செயற்­பட்ட மொஹான் என­ப­வ­ரது உயி­ருக்கு தற்­போது அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. அவர் இவ்­வி­வ­கா­ரத்தின் பிர­தான சாட்­சி­யாளர். இது பிணை சட்­டத்தின் கீழ் பிணை மறுப்­ப­தற்­கான கார­ணி­களில் ஒன்­றாகும். இதனை விட வைத்­தியர் ஷாபி­யுடன் தொடர்­பு­களைக் கொண்­டி­ருந்த ஒரு இந்­தியர் மற்றும் அரே­பியர் தொடர்பில் சில விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. அது தொடர்பில் எந்த விசா­ர­ணை­களும் இல்லை. அப்­படி இருக்­கையில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் எந்த கார­ணி­களும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை எனக் சீ.ஐ.டி கூறு­வது வேடிக்­கை­யா­னது. இந்­நி­லையில் சந்­தே­க­ந­ப­ருக்கு பிணை­ய­ளிப்­பதால் விசா­ர­ணைகள் பாதிக்­கப்­படும். பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு அது பெரும் அநி­யா­ய­மாகும். எஸ்.எச.ஜீ பரி­சோ­த­னைகள் செய்­வதில் பல பிரதி கூலங்கள் உள்­ளன. தாய்­மா­ருக்கு பரி­சோ­த­னையைத் தொடர்ந்து மலட்டுத் தன்மை அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது. எனவே அதற்கு அனு­ம­திக்கக் கூடாது. குரு­ணாகல் பொலி­ஸா­ரிடம் சீ.ஐ.டி முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களின் போது அவர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக குரு­ணாகல் பொலிஸ் அத்­தி­யட்­சரின் வாக்­கு­மூலம் மன்றில் முழு­மை­யாக சமர்ப்­பிக்க்­ப­ட­வில்லை ' என்­றனர். 

இந்த வாதப்­பி­ரதி வாதங்கள் மாலை 5 மணி­ய­ளவில் நிறை­வ­டைந்­தன. இதனை அடுத்து பிணை தொடர்­பி­லான உத்­த­ரவும் ஏனைய தீர்­மா­னங்­க­ளுக்­கு­மாக வழக்கு மாலை 5.30 மணி வரை ஒத்தி வைக்­கப்­பட்­டது. எவ்­வா­றா­யினும் மீண்டும் வழக்கு மாலை 6 மணிக்கே விசா­ர­ணைக்கு வந்­தது. இதன் போது தனது தீர்மானங்களை அறிவித்த குருணாகல் பிரதான நீதிவான் சம்பத்சேவா வசம் வைத்தியர் சாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் பாரதூரத்தன்மை , சொத்து கொள்வனவு தொடர்பிலான தரகருக்கு உள்ள உயிர் அச்சுறுத்தல் பிணை வழங்குவதால் ஏற்படவல்ல பொது மக்கள் குழப்பம் ஆகியவற்றை மையப்படுத்தி பிணை வழங்க மறுப்பு வெளியிட்டார். 

அத்துடன் இதுவரை விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்கிய கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தலைமையிலான நிபுனர்கள் குழுவின் செயற்பாடுகளுக்கு தடை விதித்து அக்குழுவை கலைத்தார். அத்துடன் இந்த விசாரணைகளுக்கு ஆலோசனைகளை சீ.ஐ.டிக்கும் நீதிமன்றுக்கும் வழங்க கொழும்பு பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியின் கீழ் ஐந்து பேருக்கு குறையாத நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை அமைமக்க நீதிவான் உத்தரவிட்டார். 

இதனைவிட குருணாகல் பொலிஸ் அத்தியட்சரின் முழுமையான வாக்கு மூலத்தை அடுத்த தவணையின் போது மன்றில் சமர்ப்பிக்க சீ.ஐ.டிக்கு நீதிவான் உத்தரவிட்டதுடன்   வைத்தியரின் சொத்துக்கள் தொடர்பில் அரச மதிப்பீட்டு திணைக்களத்தின் ஊடாக பெறுமதி மதிப்பீடொன்றை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் க்டடளையிட்டார். 

இதனையடுத்தே இது குறித்த வழக்கை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அதுவரை வைத்தியர் சாபியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21