பெரு நாட்டு பொலிஸார் போதை­வஸ்து கடத்­தலில் ஈடு­பட்ட சிறிய ரக விமா­ன­மொன்றை சுட்டு வீழ்த்­தி­யுள்­ளனர்.

மேற்­படி விமானம் நடு­வானில் பறந்த போது அதனை தடுத்து நிறுத்த பொலிஸார் மேற்­கொண்ட முயற்­சியின் போது அவர்­க­ளுக்கும் விமா­னத்­தி­லி­ருந்­த­வர்­க­ளுக்­கு­மி­டையே கடும் துப்­பாக்கிச் சமர் இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போதே அந்த விமானம் சுட்டு வீழ்த்­தப்­பட்­டுள்­ளது.

பிசிஸ் பல்­கஸு பள்­ளத்­தாக்கில் விழுந்த அந்த விமா­னத்­தி­லி­ருந்த இரு­வரில் ஒருவர் தப்­பிச்­சென்­றுள்ளார். அதே­ச­மயம் மற்­றை­ய­வ­ரான விமானி பொலி­ஸாரால் துப்­பாக்­கியால் சுட்டு மடக்கிப் பிடிக்­கப்­பட்­டுள்ளார்.

மேற்­படி விமா­னத்­தி­லி­ருந்து பொலி­ஸாரால் பல மில்­லியன் டொலர் பெறுமதியான 70 கிலோகிராம் கொக்கேயின் போதைவஸ்து கைப்பற்றப்பட்டுள்ளது.