பெண் பத்திரிகையாளரை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு முன்னாள் கடற்படை அதிகாரி வேண்டுகோள்

Published By: Rajeeban

12 Jul, 2019 | 11:26 AM
image

டுவிட்டரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்காக அவரை இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை கடற்படையின் முன்னாள் பிரதானியும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளருமான மொகான் விஜயவிக்கிரம வேண்டுகோள் விடுத்துள்ளமைக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இலங்கையில் பேருந்து புகையிரத பிரயாணங்களின் போது பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களிற்கு  உள்ளாவதை சுட்டிக்காட்டி பெண் பத்திரிகையாளர்  பதிவு செய்த கருத்திற்காக முன்னாள் கடற்படை அதிகாரி அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பதிவிட்டுள்ளார்

வக்கிர மனோபாவம் கொண்ட நபர் ஒருவரின் ஆபாசமான வார்த்தைபிரயோகங்களை இலங்கை வீதிகளில் எதிர்கொள்ளவேண்டியுள்ளதை சுட்டிக்காட்டியிருந்த பெண் பத்திரிகையாளர் என்னால் 100 மீற்றர் கூட இவ்வாறான தொந்தரவுகள் இன்றி நடக்க முடியாதுள்ளது என குறிப்பிட்டிருந்தார்

இதற்கு பதில் அளித்துள்ள கடற்படை அதிகாரி நீங்கள் இந்த நாட்டிற்கு உகந்தவர் இல்லை நீங்கள் இந்த நாட்டிலிருந்து வெளியேறுங்கள் உங்கள் உண்மை நோக்கம் என்னவென கேள்வி எழுப்பியிருந்தார்.

முன்னாள் கடற்படை அதிகாரியின் இந்த கருத்திற்கு பல ஊடகவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02