ஒன்றிணைந்து செயற்படுவதனூடாகவே பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்கலாம் - சம்பிக்க

Published By: Vishnu

12 Jul, 2019 | 10:43 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதில்  அர்த்தமில்லை. ஆளும் எதிர்கட்சிகள் இணைந்து ஒன்றாக பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் சாராம்சம் என்னவெனில் இந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் பின்னர் அரசாங்கம் சரியாக செயற்படவில்லை என்பதேயாகும். 

உண்மையில் இந்த சம்பவம் அரசாங்கதின் பலவீனத்தை காட்டுகின்றது. தவறுக்கு அரசாங்கமாக நாம் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். ஆனால் இதற்கு தீர்வு அரசாங்கத்தை வீழ்த்துவதா அல்லது அனைத்து கட்சிகளும் இணைந்து இந்த பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதா என்பதை சிந்திக்க வேண்டும். 

இன்று புதிய பயங்கரவாதம் பலமடைந்துள்ளது. இதனை வெற்றிகொள்ள மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள செயற்பட வேண்டும். இதில் தவறு எங்கு விடப்பட்டது என்பதை சிந்தித்து அதனை திருத்திக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையில் தொடர்பின்மையே இதற்குக்  காரணம். ஆனால் இன்று நாம் நாடாக வெற்றிகொள்ள வேண்டும். இதில் ஜே.வி.பி - கூட்டமைப்பு - பொதுஜன பெரமுன என அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22