இங்­கி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்கொண்­டுள்ள இலங் கை அணியில் லஹிரு திரி­மான்ன இடம்­பெற்­றி­ருக்­கிறார். ஆனால் இவர் பயிற்­சிப்­போட்­டி­யின்­போது அறி­விக்­கப்­பட்­டி­ருந்த அணியில் இடம் பெற்­றி­ருக்­க­வில்லை.

அதனால் உத்­தேச அணியில் அவர் இடம் பெற்­ற­தற்­கான காரணம் என்ன என்ற கேள்வி வெகு­வாக எழுந்­தது.

இந்­நி­லையில் இலங்கை இங்­கி­லாந்­திற்கு புறப்­ப­டு­வ­தற்கு முன் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தில் நடந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது இந்த கேள்வி எழுப்­பப்­பட்­டது, அதற்கு பதி­ல­ளித்த இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் ஆலோ­ச­க­ராக செயற்­படும் முன்னாள் வீரர் அர­விந்த டி சில்வா,

ஒரு வீரர் ஓரிரு போட்­டி­களில் சோபிக்கத் தவ­றி­விட்டால் அவரை உட­ன­டி­யாக அணி­யி­லி­ருந்து நீக்­கி­விட முடி­யாது. அவ­ருக்கு நாம் இன்னும் வாய்ப்­பு­களை வழங்­க­வேண்டும்.

சில வீரர்கள் முன்பு நன்­றாக செயற்­பட்டு இருப்­பார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து சிறப்­பாக செயற்­பட கால அவ­காசம் வேண்டும்.

இதற்கு எடுத்­துக்­காட்­டாக சனத் ஜய­சூ­ரி­யவை எடுத்துக் கொள்­ளலாம். அவ­ரது ஆரம்­ப­கால சாதனை என்­பதும் மிக மிகக் குறை­வுதான். ஆனால் அதன் பிறகு எல்­லாமே தலை­கீ­ழாக மாறி­விட்­டது.

சில வீரர்­களை பொறுத்­த­வரை நாம் அமைதி காக்­கத்தான் வேண்டும் என்று கூறினார்.