டோனி தலை­மை­யி­லான புனே அணி டெல்லியை வீழ்த்தி வெற்­றி

Published By: Raam

06 May, 2016 | 08:23 AM
image

ஐ.பி.எல். தொடரில் வெற்­றி­பெ­ற­வேண்­டிய கட்­டா­யத்தில் உள்ள டோனி தலை­மை­யி­லான புனே அணி நேற்­றைய போட்­டியில் 7 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்­தில டெல்லியை வீழ்த்தி வெற்­றி­பெற்­றது.

நேற்று இரவு நடை­பெற்ற போட்­டியில் புனே அணிக்கு எதி­ராக முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய டெல்லி டேர்­டெவில்ஸ் அணி 20 ஓவர்­களில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 162 ஓட்­டங்­களைக் குவித்­தது.

டில்­லியில் நடை­பெற்ற இந்த போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற புனே அணித் தலைவர் டோனி களத் ­த­டுப்பைத் தேர்வு செய்ய, ரிஷப் பாண்டும்,சஞ்ஜு சாம்­சனும் டெல்­லியின் துடுப்பாட்­டத்தை தொடங்­கினர். வந்த வேகத்திலேயே பாண்ட் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சாம்­ச­னுடன் இணைந்தார் கருண் நாயர். இந்த ஜோடி 2ஆவது விக்­கெட்­டுக்கு 35 ஓட்­டங்­களை சேர்த்தது. சாம்சன் 20 ஓட்­டங்­களைப் பெற்று வெளி­யேற, டுமினி களம்­பு­குந்தார். தொடர்ந்து சிறப்­பாக ஆடிய கருண் நாயர் 32 ஓட்­டங்­களை சேர்த்து ஆட்­ட­மி­ழந்தார்.

இதை­ய­டுத்து சாம் பில்லிங்ஸ் கள­மி­றங்­கினார். ஒரு­புறம் டுமினி நிதா­ன­மாக ஆட, மறு­மு­னையில் வேக­மாக ஆடிய பில்லிங்ஸ் 24 ஓட்­டங்களுடன் வெளியேறினார். இதை­ய­டுத்து வந்த பிரத்­வெயிட், முருகன் அஷ்வின் வீசிய 16ஆ­வது ஓவரில் இரு சிக்­ஸர்­களை விளா­சினார். தொடர்ந்து வேகம் காட்­டிய அவர், 8 பந்­து­களில் 20 ஓட்­டங்­களைசேர்த்து ஆட்­ட­மி­ழந்தார். அடுத்த பந்தில் டுமினி 34 ஓட்­டங்­க­ளுடன் ரன் அவுட்­டானார்.

இதனால் 20 ஓவர்­களில் 7 விக்­கெட்­டுக்கள் இழப்­புக்கு 162 ஓட்­டங்­களைக் குவித்­தது டெல்லி.

163 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்­குடன் கள­மி­றங்­கிய புனே அணி 19.1 ஓவர்­களில் 3 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 166 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது.

இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்­க­ளாக ரஹானே மற்றும் கவாஜா ஆகி யோர் கள­மி­றங்­கினர். இந்த ஜோடி அபா­ர­மாக ஆடி ஓட்­டங்­களைக் குவித்­துக்­கொண்­டி­ருக்க, 30 ஓட்­டங்­க­ளுடன் கவாஜா ஆட்­ட­மி­ழக்க, அடுத்து வந்த திவா­ரியும் 21 ஓட்­டங்­க­ளுடன் வெளியே­றினார். அதன்­பி­றகு கள­மி­றங்­கிய டோனி, ரஹா­னே­வுடன் ஜோடி சேர்ந்து ஓட்­டங்­களைக் குவித்தார். இறு­தியில் டோனியும் 27 ஓட்­டங்­க­ளுடன் ஆட் ­ட­மி­ழக்க, திஸ­ர­ பெ­ரேரா கள­மி­றங்கி போட்­டியை முடித்­து ­வைத்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடிய ரஹானே 63 ஓட்டங்களையும் திஸர 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

இறுதியில் 5 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று புனே அணி வெற்றிபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35