வடக்கில் 65000 வீட­மைப்புத் திட்­டத்தை அர­சாங்கம் உட­ன­டி­யாகக் கைவிட வேண்டும். அதற்­கான தீர்­மா­னத்தை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் எடுக்க வேண்டும் என நேற்று சபையில் எதிர்­க்கட்­சியின் பிர­தம கொற­டாவும் ஜே.வி.பி.எம்.பி.யுமான அநுரகுமார திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

பிர­த­ம­ருக்கு வாக­னங்கள் கொள்­வ­ன­வுக்கு 6000 இலட்சம் ரூபாவை செல­வ­ழிக்கும் அரசு மக்கள் மீது வரிச்­சு­மை­களை அதி­க­ரித்­துள்­ளது என்றும் அவர் குற்றம் சாட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற குறை நிரப்புக் பிரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அநு­ர­கு­மார திஸா­நா­யக்க இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்

வடக்கில் யுத்­தத்தால் வீடு­களை இழந்த மக்­க­ளுக்­காக 65000 வீட்டுத் திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இவ்­வீ­டுகள் மக்கள் வாழ்­வ­தற்கு உகந்த வீடுகள் அல்ல. அது தொடர்பில் மொறட்­டுவை பல்­க­லைக்­க­ழகம் ஆய்வு செய்து அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.

இதனை மாற்­றி­ய­மைத்து சாத­க­மாக்கிக் கொள்­வ­தற்­காக பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஆய்வு நடத்த முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

அம்­மக்கள் வை பை, லெப்டொப் கேட்­க­வில்லை. மனி­தர்கள் வாழ்­வ­தற்கு வீடு­க­ளையே கேட்­கின்­றனர். ஆனால் 5 வருட உத்­த­ர­வாதம் வழங்கி பைபர் வீடுகள் அமைத்துக் கொடுக்­கப்­ப­டு­கின்­றன.

வட­மா­காண முத­ல­மைச்­சரும் இதனை எதிர்த்­துள்ளார். எனவே இவ்­வீ­ட­மைப்பு திட்­டத்தை கைவிட அரசு உட­னடி தீர்­மா­னத்தை எடுக்க வேண்டும். இதில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கவனம் செலுத்த வேண்டும்.

வற்­வரி அதி­க­ரிக்­கப்­பட்­டதால் பொது­மக்­களின் அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலைகள், உணவுப் பொருட்­க­ளுக்­கு­மான விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் பிர­த­ம­ருக்கு இரண்டு வாக­னங்கள் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக 6000 இலட்சம் ரூபா செலவு செய்­யப்­ப­டு­கின்­றது.

டிஜிட்டல் அமைச்­சரின் உத்­தி­யோ­க­பூர்வ வாசல்­த­லத்தின் புன­ர­மைப்­புக்கு 42 இலட்சம் ரூபா செலவு செய்­யப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு செலவு செய்யும் அர­சாங்கம் தேயிலை, இறப்பர் துறையில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்­சியைத் தடுக்க எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.

தேயிலை, இறப்பர் தொழிலில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எந்­த­வி­த­மான சலு­கை­களும் இல்லை. கார்கில்ஸ் வங்­கி­களின் கிளை­களை ஆரம்­பிப்­ப­தற்­காக மத்­திய வங்­கியின் ஆளு­நரின் மரு­மகன் தனது கம்­ப­னி­யி­லி­ருந்து மது உற்­பத்­தி­களை கொள்­வ­னவு செய்­யு­மாறு தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு பழைய விளை­யாட்­டையே இந்த அர­சாங்­கமும் ஆரம்­பித்­துள்­ளது. கடந்த கால ஊழல் மோச­டிக்­கா­ரர்­களின் விசா­ர­ணை­களில் அவர்­களை கைது செய்­வதில் அர­சியல் தலை­யீ­டுகள் தலை­தூக்­கி­யுள்­ளன.

சர்­வ­தேச நாணய நிதியத்திடமிருந்து 2.2 மில்லியன் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பில் அமைச்சரவைக்கும் தெரியாது. பாராளுமன்றத்திற்கும் தெரியாது.

மக்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்படும். மக்கள் நலன் புரிகள் ஒழிக்கப்படும் என்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டே கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.