சவால்களுக்கு மத்தியில் மீண்டு வருமா சுற்றுலாத்துறை

Published By: Daya

11 Jul, 2019 | 10:54 AM
image

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி  இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் நாட்டின்  சுற்­று­லாத்­து­றையை பாரி­ய­ளவில் பாதித்­தது. கடந்த  2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் மிகவும்  வேக­மாக வளர்ச்­சி­ய­டைந்து வந்த  சுற்­று­லாத்­து­றை­யா­னது இந்த   அசம்­பா­வி­தத்தின் பின்னர் பாரிய தாக்­கத்தை எதிர்­கொண்­டுள்­ளது. 

காரணம் இந்த தாக்­கு­தல்­களில்  இலங்­கையின் நட்­சத்­திர ஹோட்­டல்­களில்  தங்­கி­யி­ருந்த   வெளிநாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் பலரும் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். அது வெளிநாட்டு சுற்­றுலாப் பய­ணி­களிடையே பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அதன்­படி  ஏப்ரல் 21 ஆம் திக­திக்கு பின்னர்  சுற்­று­லாத்­துறை பாரிய  சரிவை அடைந்­தது.    நட்­சத்­திர மற்றும் சுற்­று­லாத்­துறை  ஹோட்­டல்கள்  வெறிச்­சோடி கிடக்கும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது.   தற்­போது சுற்­றுலா அபி­வி­ருத்தி அதி­கார சபையும்   சுற்­றுலா ஊக்­கு­விப்பு பணி­ய­கமும்  சுற்­று­லாத்­து­றையை  மீண்டும் பழைய நிலைக்கு கொண்­டு­வர பாரிய  நட­வ­டிக்­கை­களை  முன்­னெ­டுத்­து­ வ­ரு­கின்­றன. எனினும் அது பாரிய சவா­லுக்கு உரிய விட­ய­மா­கவே உள்­ளது. 

ஆனால் யுத்தம் முடி­வுக்கு வந்ததன் பின்னர் நாட்டின் பொரு­ளா­தாரக் கட்­ட­மைப்பில்  சிறப்­பான பங்­க­ளிப்பை செய்து வந்த சுற்­று­லாத்­து­றையை    மீண்டும்  விரை­வாக கட்­டி­யெ­ழுப்­ப­வேண்­டிய நிலை காணப்­ப­டு­கின்­றது.  சுற்­று­லாத்­து­றை­யினால்  எந்­த­ளவு தூரம் அந்­நிய செலா­வணி நாட்­டுக்குள் வந்து சேர்­கின்­ற­னவோ  அதே­போன்று உள்­நாட்டில் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும்    இலட்­சக்­க­ணக்­கான வேலை­வாய்ப்­புக்­களும்  உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன.

 

இந்­நி­லையில்  கடந்த மே மற்றும்   ஜூன் மாதங்­களில்   இலங்­கைக்­கான சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை எவ்­வாறு உள்­ளன  என்­பதை பார்க்­க­வேண்­டி­யுள்­ளது. இலங்கை சுற்­றுலா அபி­வி­ருத்தி சபையின்  புள்­ளி­வி­ப­ரங்­களின்படி கடந்த மே மாதம் வெறு­மனே 37,802  சுற்­றுலாப் பய­ணி­களே  இலங்­கைக்கு வெளிநா­டு­க­ளி­லி­ருந்து வருகை தந்­துள்­ளனர்.  இது  கடந்த வரு­டத்தின் மே மாதம் வந்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்­கை­யுடன் ஒப்­பி­டு­கையில் 70 வீத வீழ்ச்­சி­யா­கவுள்ளது. அதே­போன்று கடந்த மார்ச் மாதம் இலங்­கைக்கு 2,44,328  சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­துள்­ளனர். ஆனால் மே மாதத்தில் வெறு­மனே  37,000  பேர் மட்­டுமே­ வந்­துள்­ளனர். 

அதே­போன்று கடந்­து­போன ஜூன் மாதத்தில் இலங்­கைக்கு 63,072 சுற்­றுலாப் பய­ணி­களே வந்­துள்­ளனர். இது கடந்த வரு­டத்தின் ஜூன் மாதத்­துடன் ஒப்­பி­டு­கையில் 57 வீத­மான வீழ்ச்­சி­யா­க­வுள்­ளது. எனினும் இங்கு மகிழ்ச்­சி­ய­டை­யக்­கூ­டிய ஒரு விடயம் உள்­ளது. அதா­வது மே மாதத்தின் பின்னர் ஜூன் மாதத்தில்  சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.   இது இவ் ­வாறே அதி­க­ரித்துச் செல்­லு­மானால்   வருட இறு­தியில் நிலைமை  ஓர் அள­வுக்கு திருப்­தி­க­ர­மாக அமையும் என்று எதிர்­பார்க்­கலாம். 

கடந்த 2018 ஆம் ஆண்டில் இலங்­கைக்கு 2333796 சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­தனர். அதன்­படி 2019 ஆம் ஆண்டில் 25 இலட்சம் சுற்­றுலாப் பய­ணி­களை  வர வைக்­கலாம் என்ற எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டது. எனினும் ஏப்ரல் 21  தாக்­கு­தல்கள் அனை த்து எதிர்­பார்ப்­புக்­க­ளையும் சீர்­கு­லைத்­து­விட்­டன. தற்­போ­தைய சூழலில்  மே மற்றும் ஜூன்  மாதங்­களில்  இலங்­கைக்கு வந்த சுற்­றுலாப் பய­ணி­களில்  இந்­தி­யாவே முத­லிடம் வகிக்­கின்­றது. தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­வ­தற்கு முன்­னரும்     இலங்கை வரும் சுற்­றுலாப் பய­ணி­களில் இந்­தி­யாவே  முத­லி­டத்தில் இருந்­தது. அந்த  நிலைமை  தொடர்ந்தும் நீடிக்­கின்­றது. இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் காணப்­ப­டு­கின்ற  நீண்­ட­கால நெருக்­க­மான இரு­த­ரப்பு உறவு   இதற்கு கார­ண­மாக இருக்­கலாம். 

மே மாதத்தில் இந்­தி­யா­வி­லி­ருந்து 11,246  சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வந்­துள்­ளனர்.  இரண்­டா­வது இடத்தில் பிரித்தானியாவும்மூன்­றா­வது  இடத்தில் ஆஸி.யும்  நான்­கா­வது  இடத்தில்  ஜேர்­ம­னியும்  ஐந்­தா­வது  இடத்தில் சீனாவும்  இருக்­கின்­றன.   மூன்­றா­வது இடத்தில் இதற்கு முன்னர் சீனா இருந்­தது.   தற்­போது  சீனா பின்­சென்­றுள்­ளது. கிட்­டத்­தட்ட இதே நிலைதான் ஜூன்  மாதத்­திலும் காணப்­ப­டு­கின்­றது. 

ஜூன் மாதத்தில் வழ­மை­போன்று முத­லா­வது இடத்தில் இந்­தியா உள்­ளது. ஜூன் மாதம் இலங்கை வந்த 63,000 சுற்­றுலாப் பய­ணி­களில் இந்­தி­யா­வி­லி­ருந்து மட்டும் 15,048  பேர் வந்­துள்­ளனர்.  இரண்­டா­வது  இடத்தில்  ஆஸி.யும் மூன்­றா­வது இடத்தில்  பிரித்தானியாவும் நான்­கா­வது இடத்தில் சீனாவும் உள்­ளன. 

கடந்த  மார்ச்  மாத­த்தின் தர­வு­களை நாங்கள் பார்க்­கும்­போது  2,44,328 சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வந்­துள்­ளனர். இதில் 34,812  சுற்­றுலாப் பய­ணிகள் இந்­தி­யா­வி­லி­ருந்து வருகை தந்­துள்­ளனர்.  அதே­போன்று  பிரித்தானியாவிலி­ருந்து  29,682  சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­துள்­ளனர்.  சீனா­வி­லி­ருந்து 23,759  பய­ணிகள் வந்­துள்­ளனர். 

எப்­ப­டி­யி­ருப்­பினும்   மே மாதத்­துடன் ஒப்­பி­டு­கையில், ஜூன் மாதத்தில்  சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை அதி­க­ரித்­துள்­ளது. இந்த நிலைமை மேலும் உயர்­வ­டை­ய

வேண்டும். நாடு  பாது­காப்­பா­ன­தாக  உள்­ளது என்ற விடயம்  வெளிநா­டு­க­ளுக்கு உணர்த்­தப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.  ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் இலங்­கைக்கு பயணத் தடையை விதித்­தி­ருந்த நாடுகள் தற்­போது அவற்றை தளர்த்தி வரு­கின்­றன.    

2018 ஆம் ஆண்டில் மட்டும் இலங்­கைக்கு 2333796   சுற்­றுலாப் பய­ணிகள் வந்­துள்­ளனர்.   இது இலங்­கையை  பொறுத்­த­வரை  பாரிய வளர்ச்­சி­யாகும். கடந்த  2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்தபோது இலங்­கைக்கு வந்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை  நான்­கரை இலட்­சங்­க­ளாகும்.   

எனினும்  கடந்த 10 வருட காலப்­ப­கு­தியில்  23 இலட்­ச­மாக  வெளிநாட்டு  சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.  இது அபார வளர்ச்­சியை  எடுத்­துக்­காட்­டு­கின்­றது. இத­னூ­டாக இலங்­கையின் சுற்­று­லாத்­துறை எந்­த­ளவு தூரம் வளர்ச்­சி­ய­டைந்து செல்­கின்­றது என்­ப­தனை  புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு தர­வு­களின் பிர­காரம் சுற்­று­லாத்­துறை கார­ண­மாக  169003  பேர் நேர­டி­யாக  தொழில் வாய்ப்­புக்­களை பெற்­றுள்­ளனர். அதே­போன்று மறை­மு­க­மாக 219484 பேர்   தொழில்­வாய்ப்­புக்­களை  பெற்­றுள்­ளனர். இது இன்னும் அதி­க­மாக இருக்கும்  என கூறப்படுகிறது.அத­னூ­டாக பார்க்­கும்­போது சுமார் 4  இலட்சம் பேர்  சுற்­று­லாத்­துறை கார­ண­மாக  தொழில்­வாய்ப்­புக்­களை பெற்­றுள்­ளனர். இதனை வெறு­மனே  நான்கு இலட்சம்   பேர் என்று கூற முடி­யாது. இங்கு நான்கு இலட்சம் குடும்­பங்கள்  இதில் தங்கி வாழ்­கின்­றன  என்­பதே யதார்த்­த­மாகும். 

கடந்த  2018 ஆம் ஆண்டில் மட்டும் இலங்­கைக்கு சுற்­று­லாத்­துறை ஊடாக  4,381  மில்­லியன்  டொலர்கள்   வரு­மானம் கிடைத்­துள்­ளது.  2017 ஆம் ஆண்டில் 3,925  மில்­லியன் டொலர்கள் இலங்­கைக்கு கிடைத்­துள்­ளன. அதனால்    சுற்­று­லாத்­துறை ஊடாக இலங்­கைக்கு எந்­த­ளவு தூரம் வரு­மானம் கிடைக்­கின்­றது என்­ப­த­னையும்   அது பொரு­ளா­தா­ரத்தில் எவ்­வ­ளவு முக்­கிய பங்­க­ளிப்பை செலுத்­து­கின்­றது  என்­ப­த­னையும் நாம்  ஊகிக்­கலாம். 

இவ்­வாறு அதி­க­ளவு  தொழில்­வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள மற்றும்   பொரு­ளா­தா­ரத்தில் பாரிய  பங்­க­ளிப்பை செலுத்­து­கின்ற சுற்­று­லாத்­து­றையை    மீளக் கட்­டி­யெ­ழுப்ப அர­சாங்கம்    உட­ன­டி­யாக உரிய  நட­வ­டிக்­கை­களை எடுக்­க ­வேண்டும். தற்­போ­தைய  சூழலில்  இலங்­கையின் சுற்­று­லாத்­து­றையை   மீளக்­கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய   இய­லுமை அர­சாங்­கத்­தி­டமே காணப்­ப­டு­கின்­றது.   ஏற்­க­னவே  சுற்­றுலா அபி­வி­ருத்தி அதி­கார சபையும்  சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமும்  இந்த விடயத்தில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இந்த விடயத்தில் உலக நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று  செயற்படலாம். குறிப்பாக உலக அளவில் உள்ள சுற்றுலாத்துறை  தொழில்சார் நிபுணர்களின்  ஆலோசனைகளை பெற்று  நடவடிக்கை எடுக்கலாம். 

எப்படியும் தற்போதைய இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படவேண்டியது முக்கியமாகும். நாட்டில் பாதுகாப்பு  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பான சூழல் உள்ளது என்றது மான செய்தி  சரியான முறையில் கொண்டு செல்லப்படவேண்டும்.  சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் செலவிடும் ஒவ் வொரு  டொலரும்  எமது நாட்டின் பொரு ளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் என்பதனை  யாரும் மறந்துவிடக்கூடாது. 

எனவே தற்போது இந்த விடயத்தில் செலுத்தப்படும் அதிகூடிய அவதானம்  தொடரவேண்டும் என்பதுடன் சுற்று 

லாத்துறையை  கட்டியெழுப்ப  அர்ப் பணிப்புடன் செயற்படவேண்டியது கட்டாயமாகும்.  

(ரொபட் அன்டனி)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57
news-image

யாழில் முதல் முறையாக மருந்து வில்லைகள்...

2024-03-11 16:16:39
news-image

KIST தனது சோஸ் வகைகளை புதிய...

2024-03-08 10:44:09
news-image

முன்னேற்றத்தின் பங்காளியாக 135 ஆண்டுகால பெருமை...

2024-03-06 17:32:13
news-image

பிரீமியம் அந்தஸ்தை பெற்றுள்ள Radisson Hotel...

2024-03-04 16:26:08
news-image

பான் ஏசியா வங்கி 2023 நிதியாண்டில்...

2024-02-26 16:45:55
news-image

புரத தினம் 2024: இவ்வருடத்தின் எண்ணக்கரு...

2024-02-26 16:58:38
news-image

Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட...

2024-02-26 16:58:18