எமது பிள்ளைகளை வைத்து பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன ; வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் 

Published By: Digital Desk 4

10 Jul, 2019 | 02:31 PM
image

எமது பிள்ளைகளை வைத்து இன்று பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இந்த செயற்பாட்டை சில அமைப்புக்களும் முன்னெடுக்கின்றனர்.என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் உள்ள குறித்த சங்கத்தின் தலைவியின் இல்லத்தில் இன்று காலை 10.30 மணியளவில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்

இதன்போது குறித்த சங்கத்தின் தலைவி ஊடகங்களிற்கு தெரிவித்த பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது பிள்ளைகளை வைத்து இன்று பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இந்த செயற்பாட்டை சில அமைப்புக்களும் முன்னெடுக்கின்றனர். அதேபோன்று தற்போது தனி நபர்களும் ஆரம்பித்துள்ளனர். 

கிளிநொச்சி வன்னேரிகுளம் பகுதியை செர்ந்த இந்த தாயாரின் பிள்ளையின் புகைப்படத்தை வைத்துஇருவர் நிதி சேகரித்துள்ளனர். இந்த தாயாரின் பிள்ளை படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது இந்த புகைப்படம் அடங்கலான பல ஆவணங்களோடு சென்றிருந்தார். இந்த புகைப்படம் எவ்வாறு இவர்களுக்கு கிடைத்தது. இந்த உண்மையை அரசியல்வாதிகளும், எமது தமிழ் தலைமைகளும் உணரவேண்டும். அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். 

குறித்த ஊடக சந்திப்பில் கருத்தது தெரிவித்த கிளிநொச்சி வன்னேரி குளம் பகுதியை சேர்ந்த இந்திராதேவி என்ற தாய் தெரிவிக்கையில்,

எனது மகளான ஜெயமதி 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவு பெற்றபோது இராணுவத்திடம் சரணடைந்த முதல் தேடி வருகின்றோம். இந்த நிலையில் கடந்த மாதம் 5ம் திகதி எனது மகளின் புகைப்படத்துடன் ஒருவர் எமது பிரதேசத்தில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். 

அவரை நாங்கள் அக்கராயன் பொலிசாரிடம் ஒப்படைத்தோம். எனது மகளின் இந்த புகைப்படம் மற்றும் ஏனைய புகைப்படங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களுடன் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்றிருந்தார். 

அவரை அன்றுமுதல் நாம் காணாதவர்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த நிலையில் இவரது புகைப்படத்துடன் சிலர் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் எனது பிள்ளையை கண்டுபிடித்து தாருங்கள் என அவர் ஊடகங்கள் ஊடாக தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47