ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகஸ்டில் அறிவிப்பு

Published By: R. Kalaichelvan

10 Jul, 2019 | 12:51 PM
image

ஐக்­கிய தேசியக் கட்­சியின்  ஜனா­தி­பதி வேட்பாளர் மற்றும்  அக்கட்­சியைப் பிர­தா­ன­மாகக் கொண்ட புதுக் கூட்­ட­மைப்பு தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறிவிக்க ஐ.தே.க. தீர்­மானித்­துள்­ளது.

நேற்று அலரி மாளி­கையில்  ஐ.தே.மு.வில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்­சி­க­ளுடன்  இடம்­பெற்ற விஷேட  கலந்­து­ரை­யா­டலை அடுத்து இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஐ.தே.மு.வின் கூட்டுக் கட்­சி­களின் கூட்டம் நேற்று அலரி மாளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்­றது. இதில்  ஐ.தே.க.வை பிரதிநிதித்­துவம் செய்து,  அமைச்­சர்­க­ளான ரவி கரு­ணா­நா­யக்க, ராஜித்த சேனா­ரத்ன, அகில விராஜ் காரி­ய­வசம்,  மலிக் சம­ர­விக்­ரம மற்றும் மங்­கள சம­ர­வீர ஆகியோர் பங்­கேற்­றனர்.

ஐ.தே.மு.  கூட்­ட­ணியில் அங்கம் வகிக்கும் கூட்­டணிக் கட்­சிகள் சார்பில்,   தமிழர் முற்­போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் திகாம்­பரம்,  அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க,  மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதி­யுதீன்  ஆகியோர் பங்­கேற்­றனர்.

இதன்­போது நடப்பு அர­சியல் விவ­காரம் மற்றும் நாட்டு நிலைமை தொடர்பில் விரி­வாக ஆராயப்பட்­டுள்­ளது. இதன்­போதே  எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலை எதிர்­கொள்­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. 

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் அமைக்­கப்ப­ட­வுள்ள பரந்த பொதுக் கூட்­ட­மைப்பு தொடர்பில் நீண்ட கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றுள்­ள­துடன் அதன் சின்னம்,  ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இந் நிலை­யி­லேயே பொதுக் கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அறிவிப்பது என முடி வெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47