"இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் சோபா என்று உடன்­ப­டிக்கை எது­வு­மில்லை"

Published By: R. Kalaichelvan

10 Jul, 2019 | 12:32 PM
image

(நா.தனுஜா)

இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடை யில் படை­களின் அந்­தஸ்து உடன்­ப­டிக்கை (சோபா) என்ற ஒன்று இல்லை. அத்­த­கைய உடன்­ப­டிக்கை ஒன்­றுக்கு அவ­சி­ய­மான முன்­மொ­ழிவு எதுவும் அதற்குப் பொறுப்­பான பாது­காப்பு அமைச்­சினால் அமைச்சரவையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை என்று பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­தி­ருக்கி­றது.

அமெ­ரிக்­கா­வு­ட­னான சோபா மற்றும் மிலே­னியம் சவால் ஒத்­து­ழைப்பு ஆகிய உடன்­ப­டிக்­கைகள் தொடர்பில் அதி­க­பட்ச வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் செயற்­ப­டு­மாறு கோரி இலங்கை வர்த்­தக சபையின் தலைவர் ஹான்ஸ் விஜே­சூ­ரிய கடந்­த­வாரம் பிர­த­ம­ருக்குக் கடி­த­மொன்றை அனு ப்­பி­வைத்­த­துடன், அக்­க­டி­தத்தின் பிரதி ஊட­கங்­க­ளுக்கும் வழங்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் ஹான்ஸ் விஜே­சூ­ரி­யவின் கடி­தத்­திற்குப் பதி­ல­ளிக்கும் வகையில் பிர­த­மரின் செய­லாளர் ஈ.எம்.எஸ்.பீ.ஏக்­க­நா­யக்க கையெ­ழுத்­திட்டு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

அதில் மேலும் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­வது,

சோபா மற்றும் மிலே­னியம் சவால் ஒத்­து­ழைப்பு ஆகிய உடன்­ப­டிக்­கைகள் தொடர்பில் உச்­ச­பட்ச வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் செயற்­ப­டு­மாறு கோரிக்கை விடுத்து பிர­த­ம­ருக்கு கடந்த 3 ஆம் திகதி கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்­தி­ருந்­தீர்                          கள். 

அக்­க­டி­தத்­தின்­படி சோபா மற்றும் மிலே­னியம் சவால் ஒத்­து­ழைப்பு உடன்­ப­டிக்­கைகள் பற்­றிய விட­யங்கள் தொடர்பில் இலங்கை வர்த்­த­க ச­பையின் அறி­யாமை குறித்து பிர­தமர் அதிர்ச்­சி­ய­டைந்தார் என்­பதை அறி­யத்­தர விரும்­பு­கிறேன்.

நல்­லாட்சி மற்றும் வெளிப்­ப­டைத்­தன்­மையை மதித்து மிலே­னியம் சவால் ஒத்­து­ழைப்பு குறித்து நடை­பெற்ற கலந்­து­ரை­யாடல் தொடர்பில் கடந்த 2016 ஏப்ரல் மாதம் 4ஆம், 7ஆம், 8ஆம் திக­திகள், ஜுன் மாதம் 14ஆம், 22ஆம் திக­திகள், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம், 6ஆம் திக­திகள் மற்றும் கடந்த ஆண்டு அக்­டோபர் 19ஆம், 27ஆம் திக­தி­களில் கடிதம் ஊடாக இலங்கை வர்த்­த­க ­சபை மற்றும் அதன் உறுப்­பி­னர்­க­ளுக்கு அறி­யத்­த­ரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

மிலே­னியம் சவால் ஒத்­து­ழைப்பு உடன்­ப­டிக்கை மற்றும் அதன் உத்­தேச செயற்­றிட்டம் தொடர்பில் உங்­க­ளுக்கு அறி­யத்­த­ரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. நீங்கள் அறிந்­த­வாறு இந்த செயற்­றிட்­டத்தைப் பிரே­ரித்­தது எமது அர­சாங்­க­மாகும். அமெ­ரிக்க அர­சாங்­கத்­தினால் 490 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் நன்­கொடை இதற்­காக வழங்­கப்­ப­டு­கின்­றது. இந்த உடன்­ப­டிக்­கையில் கையெ­ழுத்­திட்­டதன் பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் அதற்­கான அனு­மதி பெறப்­ப­ட­வேண்டும். இது அமெ­ரிக்­காவில் மாத்­தி­ர­மன்றி, ஐரோப்­பிய நாடு­க­ளிலும் காணப்­படும் ஒரு நிதிசார் நடை­மு­றை­யாகும்.

பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­டளைச் சட்­டத்­திற்கு அமைய இந்த உடன்­ப­டிக்கை பாரா­ளு­மன்ற மேற்­பார்வைக் குழு­வினால் மீளாய்வு செய்­யப்­ப­டு­வ­தற்கும், அது­சார்ந்த தரப்­பி­னரின் முன்­மொ­ழி­வு­களைப் பெறு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை இலங்கை மற்றும் ஐக்­கிய அமெ­ரிக்க நாடு­க­ளுக்கு இடையில் சோபா உடன்­ப­டிக்கை இல்லை என்­ப­துடன், அது­சார்ந்த மாதிரி பிரே­ர­ணைகள் எவையும் அத­னுடன் சம்­பந்­தப்­பட்ட பாது­காப்பு அமைச்­சினால் அமைச்­ச­ர­வைக்குச் சமர்ப்­பிக்­கப்­ப­டவும் இல்லை.

இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் மீண்டும் விளக்­க­ம­ளிப்­ப­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கி­யமை குறித்து நன்றி தெரி­விக்­கின்றோம். அதே­வேளை அனைத்துச் செயற்­பா­டு­க­ளி லும் பங்­கு­தா­ர­ராகச் செயற்­பட்ட இலங்கை வர்த்­த­க­சபை திடீ­ரென்று எதுவும் அறி­யா­தவர் போன்று நடந்து கொள்­கின்­றமை தொடர்பில் பிர­தமர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். 

தற்போது அரசி யல் கட்சி ஒன்றினால் கூறப்பட்டுவரும் கருத்து சார்ந்து நோக்குகையில், இந்தத் திடீரென்ற அறியாமை உங்கள் நோக்கம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து சந்தே கத்தை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் கருது கின்றார். புகழ்பெற்ற வர்த்தக அமை ப்பான இலங்கை வர்த்தகசபை உங்களு டைய தலைமையின் கீழ் (ஹான்ஸ் விஜே சூரிய) அரசியல் மயப்பட்டுள் ளமை கவலைக்குரிய விடயமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02