இந்திய கிரிக்கெட் ரசிகை ஒருவர் டுவிட்டரில் கெய்லிடம் கேட்ட கேள்விக்கு அவர்  நச்சென பதிலளித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் அதிரடி வீரர் மட்டுமல்ல, பற்கல சேஷ்டைகளிலும் கில்லாடி.

அதேவேளை, குசும்பாக பேசுவதிலும்  அவரை விஞ்ச எவரும் இல்லை. அண்மையில், அவுஸ்திரேலியாவில் பெண் நிருபரிடம் குசும்பாகப் பேசி சர்ச்சையில் சிக்கினார்.  அதற்குப் பின்னர்  கெய்ல் ரொம்ப நாசூக்காக பேசி வருகிறார்.

இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. இதில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கிறிஸ் கெய்ல் இடம்பிடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகை ஒருவர் டுவிட்டரில் கெய்லிடம் ஒரு கேள்வியைக் கேட்க அவர் அதற்கு நச்சென பதிலளித்துள்ளார்.

மிஸ் அரோஹி என்ற பெண் தனது டுவிட்டரில் கெய்லிடம், எனது இதயம் உங்களுக்காக மட்டுமே துடிக்கிறது பாஸ். நாம் டேட்டிங் போகலாமா என்று கேட்டுள்ளார். 

அதற்கு கெய்ல், நீங்கள் பில்லை கட்டுவதாக இருந்தால் நான் தயார் என்று கலாய்த்துள்ளார்.