ஆடாமல் ஜெயிக்குமா இந்தியா?

Published By: Vishnu

10 Jul, 2019 | 11:27 AM
image

மழையால் நேற்றைய தினம் இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

மான்செஸ்டர் நேற்றைய தினம் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தடி வந்தது.

இந் நிலையில் 46.1 ஓவருக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை நியூஸிலாந்து பெற்றிருந்த வேளை இலங்கை நேரப்படி மாலை 6.30 மணியளவில் மழை குறுக்கிட்டது.

இதனால் ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது. தனது 50 ஆவது அரைசதத்தை நிறைவு செய்த டெய்லர் 67 ஓட்டத்துடனும் டொம் லெதம் மூன்று ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

தொடர்ந்து மழை பெய்ததால், நடுவர்களும், வீரர்களும் நீண்ட நேரம் காத்திருந்தனர். டக்வொர்த் லூவிஸ் விதிமுறைப் படி 20 ஓவர்களில் இந்தியாவுக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்படலாம் என்ற நிலையும் வந்தது. ஆனால் மழை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

இதன் பின்னர் இலங்கை நேரப்படி இரவு 10.50 மணியளவில் ஆட்டம் நாளை தொடரப்படும் என அறிவிக்கப்பட்டது.

நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டும் மாற்றுநாள் (ரிசர்வ் டே) வைக்கப்பட்டுள்ளது. இதன்படி மழையால் பாதிக்கப்பட்ட இந்த அரை இறுதி ஆட்டம் மாற்று நாளான இன்று இலங்கை நேரப்படி மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய நாளில் நியூசிலாந்து அணி அதே நிலையில் இருந்து (211-5 ரன்) எஞ்சிய 23 பந்துகள் பேட்டிங் செய்யும். அதன் பிறகு இந்திய அணி துடுப்பெடுத்தாடும்.

மான்செஸ்டரில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இன்றைய தினமும் காணப்படுவதனால் ஒருவ‍ேளை மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றதன் அடிப்படையில் இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பு கிட்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31