“ மரணதண்டனையை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இலங்கையர்கள் அனைவரும் உறுதிபூண வேண்டும்”

Published By: Daya

10 Jul, 2019 | 11:17 AM
image


(நா.தனுஜா)


மர­ண­தண்­ட­னையை முற்­றாக இல்­லா­தொ­ழித்­தி­ருப்­ப­தற்குத் தீர்­மா­னித்­தி­ருக்கும் பல்­வேறு சர்­வ­தேச நாடு­களின் மத்­தியில் இலங்­கையும் ஒரு அங்­க­மாகும் என்ற அடிப்­ப­டையில், அதனை மீண்டும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என்­பது மிக முக்­கிய பிரச்­சி­னை­யாகும். 



எனவே மிகவும் குரூ­ர­மா­னதும், இழி­வா­ன­து­மான மர­ண­தண்­ட­னையை முற்­றாக இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு இலங்­கை­யர்கள் அனை­வரும் உறு­தி­பூ­ணு­வ­துடன், அதற்­காக ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும் என்று மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து அழைப்பு விடுத்­துள்ளார். 



மரண தண்­ட­னையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு இலங்­கை­யர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என்று வலி­யு­றுத்தி மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் டுவிட்டர் பக்­கத்தில் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்ள காணொளி ஒன்றின் ஊடா­கவே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார். 

 



அதில் அவர் மேலும் கூறி­யி­ருப்­ப­தா­வது,

நாட்டில் மர­ண­தண்­ட­னையை மீண்டும் அமுல்­ப­டுத்­து­வ­தென்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தொரு பிரச்­சி­னை­யாகும். மர­ண­தண்­ட­னையை முற்­றாக இல்­லா­தொ­ழிக்கும் தீர்­மா­னத்தை மேற்­கொண்ட பல்­வேறு சர்­வ­தேச நாடு­களில் இலங்­கையும் ஓரங்­க­மாகும். அதே­போன்று மர­ண­தண்­ட­னையை இல்­லா­தொ­ழிக்கும் நோக்கில் ஐக்­கிய நாடுகள் சபையின் மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்­று­வதில் ஒரு இடை­நி­றுத்­தலைக் கோரும் 7 தீர்­மா­னங்­களில் 5 இற்கு ஆத­ர­வாக இலங்கை வாக்­க­ளித்­தது. 



நாடொன்றின் அர­சாங்­கமே தனி­யொரு நபரின் உயிரைப் பறிப்­ப­தென்­பது மிகவும் கொடூ­ர­மான தண்­ட­னை­யாகும். என்னைப் பொறுத்­த­வ­ரையில் இது மிகவும் குரூ­ர­மா­னதும், இழி­வா­ன­து­மான தண்­டனை முறை­யொன்­றாகும்.


மேலும் சட்­ட­மு­றையின் குறை­பா­டுகள் கார­ண­மாக நிர­ப­ராதி ஒருவர் தண்­டிக்­கப்­படும் வாய்ப்­புக்கள் காணப்­படும் அதே­வேளை, மரணதண்டனையின் ஊடாகக் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே இத்தகைய மோசமான மரணதண்டனை முறைமையை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இலங்கையர்கள் அனைவரும் உறுதிபூண்டு, ஒன்றிணைய வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55