50 ரூபா கொடுப்பனவுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது - திகாம்­பரம்

Published By: Digital Desk 4

10 Jul, 2019 | 10:58 AM
image

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்களுக்கு கூட்டு ஒப்­பந்த சம்­பள உயர்­வுக்கு மேல­தி­க­மாக 50 ரூபாவைப் பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்தக் கொடுப்­ப­னவு அதி­க­ரிப்­புக்கு யாரும் சொந்தம் கொண்­டாட முடி­யாது. தாமதம் ஆனாலும் வெகு விரைவில் கிடைக்கும். 

என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பி. திகாம்­பரம் தெரி­வித்­துள்ளார்.

மேற்­படி அமைச்சின் 1 கோடியே  45 இலட்சம்  ரூபா நிதி மற்றும் நுவ­ரெ­லியா மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். தில­க­ராஜின் 80 இலட்சம்  ரூபா பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி ஆகி­ய­வற்றைக் கொண்டு மொத்­த­மாக 2 கோடியே 25 இலட்சம்  ரூபா செலவில் சாமி­மலை நக­ரி­லி­ருந்து மின்னா தோட்டம் வரை செல்லும் பாதை 'கொங்­கிரீட்' இடு­வ­தற்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

 அமைச்சர் இது குறித்து மேலும் தெரி­விக்­கையில்,

 நான் அமைச்­ச­ராக வந்த பிறகு மலை­ய­கத்தில் நீண்ட கால­மாக கவ­னிக்­க­ப்ப­டாமல் கிடந்த பல வேலைத் திட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகையில் 20 வரு­டங்­க­ளுக்கு மேல் புறக்­க­ணிக்­கப்­பட்ட நிலையில் இருந்த மின்னா தோட்­டத்­துக்­கான பாதை  2¼  கோடி ரூபா செலவில் செப்­ப­னி­டப்­ப­ட­வுள்­ளது. இந்தப் பாதைக்கு ஏற்­க­னவே மத்­திய மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் 40 இலட்சம் ரூபா செலவில் ஒரு பகு­தியை செப்­ப­னிட்டுக் கொடுத்­துள்ளார்.

 தோட்­டங்­களில் மக்கள் பய­ணிக்கும் பாதைகள் மிகவும் மோச­மான நிலையில் இருப்­பதால் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது. இதைக் கருத்திற் கொண்­டுதான் பாதை­களை செப்­ப­னிட்டுக் கொடுப்­பதில் கூடிய கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அனே­க­மாக எல்லாத் தோட்­டங்­க­ளுக்கும் பாதை­களை செப்­ப­னிடும் வேலைத் திட்டம் விஸ்­த­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இதற்­கென கோடிக் கணக்கில் நிதி ஒதுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

 எமது மக்­க­ளுக்கு தோட்­டங்­களில் வீடு­களை அமைக்கும் போது தேயி­லைகள் பிடுங்­கப்­ப­டு­வ­தாக பாரா­ளு­மன்­றத்தில் கூறு­கின்­றார்கள். தேயி­லையைப் பிடுங்­காமல் வீடு­களைக் கட்ட முடி­யுமா?   அத்­தோடு, தோட்­டங்­களில் காடு மண்டிக் கிடப்­ப­தா­கவும் கூறி வரு­கின்­றார்கள். காடுகள் நேற்றோ இன்றோ முளைக்­க­வில்லை. தோட்­டங்­களை கம்­ப­னிகள் பொறுப்­பேற்ற காலத்­தி­லி­ருந்து தான் அவை காடு­க­ளாக காட்சி தரு­கின்­றன. அதற்கு நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­ய­வர்கள் தான் பொறுப்புக் கூற வேண்டும்.

 இந்த ஆண்டில் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லோடு மூன்று தேர்­தல்கள் நடை­பெ­ற­வுள்­ளன. எனவே, தேர்தல் களத்தில் மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக புதுப்­புது கதை­களைப் புனைந்து கொண்டு வரு­வார்கள். இது வரையில் உரிய முறையில் சேவை செய்­தது யார், மக்­களை ஏமாற்­றி­யது யார் என்­பதை சீர்­தூக்கிப் பார்த்து பொருத்­த­மா­ன­வர்­களைத் தெரிவு செய்ய முன்­வர வேண்டும்.

  பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள உயர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவ­தாக சூளு­ரைத்­த­வர்கள்  வெறும் 20 ரூபாவை மாத்­தி­ரமே பெற்றுக் கொடுத்­துள்­ளார்கள். கடந்த முறை 730 ரூபா­வாக இருந்த அடிப்­படைச் சம்பளம் இந்த முறை 750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

எனவே தான், நாம் அரசாங்கத்துடன் பேசி மேலும் 50 ரூபாவை அதிகரித்த கொடுப்பனவாக வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். அதை எப்படி வழங்குவது என்பது பற்றி ஆராயப்பட்டு வருகின்றது. அது விரைவில் கிடைக்கும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04