அதிகமான பாவனையின் போது நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்கும் வகையில் தற்போது சந்தையில் கிடைக்கப்பெறும் ஒரு சில தொலைபேசிகளுள் ஒன்றாகவும், தமது கையடக்கத் தொலைபேசியை மிக நீண்ட காலத்திற்கு உபயோகித்துப் பேண விரும்புகின்றவர்களுக்கு பொருத்தமான ஒன்றாகவும் திகழ்கின்ற Huawei Y6Pro இனை Huawei நுகர்வோர் வியாபாரக் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

அதிசிறந்த மின்கல வலுவைக் கொண்டுள்ளதுடன்ரூபவ் வெறும் 10 நிமிடங்களில் சார்ஜ் செய்யக்கூடிய வகையில் விரைவாக சார்ஜ் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது. வெறும் 10 நிமிடங்களில் 0%  மின்கல வலுவிலிருந்து 3 மணி நேரம் வரை உரையாடக்கூடிய நேரத்திற்கு துரிதமாக சார்ஜ் செய்யப்படக்கூடியது. அது மட்டுமன்றி, வெளியில் உள்ள போது ஏனைய தொலைபேசி உபகரணங்களைச் சார்ஜ் செய்ய உதவும் வகையில் கையடக்க சார்ஜர் சாதனமாகவும் உபயோகிக்கப்படக்கூடியது.

Huawei நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் கடந்த தசாப்த காலத்தில் ஒட்டுமொத்தமாக 30 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன்ரூபவ் பாதுகாப்பு தொடர்பில் இந்த கையடக்கத் தொலைபேசியானது 50 வரையான வேறுபட்ட கடுமையான தொழிற்பாட்டுத் திறன் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் ஸ்மார்ட்போனை விரும்புகின்றவர்களின் தேவைகள் அனைத்தையும் ரூடவ்டுசெய்யும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதன் மின்கலமானது 3 வருடங்கள் பாவனையின் பின்னரும் அதன் திறனில் 80% இனைக் கொண்டிருக்கும் என சோதனைகள் நிரூபித்துள்ளன.

எந்நேரமும் கையடக்கத் தொலைபேசியை உபயோகிக்கின்றவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் கொண்ட கையடக்கத் தொலைபேசியாக Huawei Y6Pro திகழ்வதுடன் 5 அங்குல HD முகத்திரை கமரா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டுள்ளது. 

பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அப்பால் கையடக்க சார்ஜர் சாதனமாகவும் உபயோகிக்கப்படக்கூடிய Huawei Y6 பாவனையாளர் எந்த இடத்தில் இருந்தாலும் அவர் தொடர்ச்சியாக இணைப்பில் இருப்பதை உறுதி செய்கின்றது.