புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கின் சந்தேக நபர்கள் 9 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி மேல் நீதிமன்றில் ஆஜராக்குமாறு யாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 நீதிமன்றத்தை அன்றைய தினம் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்குட்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற சுற்று வளாகப் பகுதியில் பொலிசாரின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் யாழ் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.