சுகாதார அமைச்சு ஊழல் மோசடி தொடர்பில் அமைச்சின் செயலாளர் என்ன செய்யவேண்டும்?

Published By: R. Kalaichelvan

09 Jul, 2019 | 10:38 AM
image

(ஆர்.விதுஷா)

சுகா­தார அமைச்சில் இடம் பெற்­றி­ருப்­ப­தாக கூறப்­படும் ஊழல்  மோசடி முறை­கே­டுகள் தொடர்பில் தாம்  முன்­வைத்த குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­கான  பொறுப்­புக்­கூறலில் இருந்து சுகா­தார,சுதேச மருத்துவ  அமைச்சர்  ராஜித சேனா­ரத்ன நழுவ முற்­ப­டு­வ­தாக குற்­றஞ்­சாட்­டி­யி­ருக்கும்  அர­சாங்க  வைத்­திய  அதி­கா­ரிகள் சங்­கத்­தினர் அது தொடர்பில் சுகா­தார அமைச்சின் செய­லாளர் எடுக்க  வேண்­டிய நட­வ­டிக்கை தொடர்பில் யோச­னை­களை முன்வைத்துள்­ளனர்.

அரச மருத்­துவ அதி­கா­ரிகள் சங்­கத்தின் தலை­மை­ய­கத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை செய்தியாளர் சந்திப்பில் இடம் பெற்­றது. இதில்  கலந்து  கொண்டு  கருத்து  தெரி­வித்த வைத்­திய  அதிகாரிகள்  சங்­கத்தின்  செய­லாளர்  ஹரித  ஹேரத்  கூறி­ய­தா­வது,  

சுகா­தார அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடி தொடர்பில் அமைச்சர் ராஜித செனா­ரத்­னவின்  மீது நாம் முன்­வைத்­ தி­ருக்கும் குற்­றச்­சாட்­டுக்கள்  அனைத்தும்   ஆதா­ர­பூர்­வ­மா­ன­வை­யாகும். அந்த குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து  நழுவும் வகை­யி­லான  கருத்­துக்­க­ளையே அமைச்சர்  தொடர்ந்தும்   கூறி  வரு­கின்றார். 

களுத்­து­றையில்  அரச  வைத்­திய அதி­கா­ரிகள்  சங்­கத்­தினர் மீதான  தாக்­குதல் அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவின் ஆத­ர­வா­ளர்­க­ளினால்   மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை  தொடர்பில் ஆதா­ரங்­க­ளுடன் முறைப்­பாடு செய்­துள்ளோம். இருப்­பினும்  அது தொடர்பில்  இது வரையில்  எத்­த­கைய  நட­வ­டிக்­கையும்   எடுக்­கப்­ப­ட­வில்லை.  

நெவில்  பெர்­னாண்டோ வைத்­தி­ய­சாலை  இது­வ­ரையில் தனியார் வைத்­தி­ய­சா­லை­யா­கவே இயங்கி வரு­கின்­றமை குறித்து ஜனா­தி­பதி  விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் சுகா­தார அமைச்சின்  செய­லாளர்  அளித்த வாக்­கு­மூ­லத்தின்  ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.  தனியார்  வைத்­திய சாலைக்கு  மக்­களின் பணம்  அநா­வ­சி­ய­மான  முறையில்  செல­வி­டப்­ப­டு­கின்­றது. ஆகவே அதனை  தடுத்து  நிறுத்­து­வ­தற்கு  உரிய  நட­வ­டிக்­கை­களை  சுகா­தார  அமைச்சின்  செய­லாளர்  மேற்­கொள்ள  வேண்டும். புற்­று­நோய்க்­கான  மருந்துப்­பொருள் கொள்­வ­னவின்  போது தர­மற்ற  மருந்துப்  பொருள்  கூடிய விலையில் கொள்­வ­னவு  செய்­யப்­ப­டு­கின்­றன.  

அவ­சர  தேவை என்று கூறப்­பட்டே இந்த மருந்துப் பொருள் கொள்­வ­னவு இடம் பெற்­றுள்­ளது.அவ­சர தேவைக்­கான மருந்துக் கொள்­வ­னவு  என்று  கூறுப்­பட்டே  இந்த  கொள்­வ­ன­வுகள்  இடம் பெறு­கின்­றன இவ்­வாறு திட்­ட­மிட்ட வகையில்  மேற்­கொள்­ளப்­படும்  மருந்­துப்­பொருள்  மாபி­யாவை  நிறுத்­து­வ­தற்­கான  நட­வ­டிக்­கை­களை  முன்­னெ­டுக்க  வேண்டும்.இவ்­வா­றான ஊழல் மோச­டிகள்  தொடர்பில்  உரிய  நட­வ­டிக்­கை­களை  எடுக்கதவறும் பட்­சத்தில் நோயா­ளிகள் பாதிக்­கப்­ப­டு­வ­துடன்,புதிய புற்­று­நோய்­கான மருந்­துப்­பொ­ருட்­களை  கொள்­வ­னவு  செய்ய  இய­லாத  துர்ப்­பாக்­கிய  நிலை உரு­வாகும்.  

ஆகவே, சுகா­தார அமைச்­சினுள் இடம் பெறும் இத்தகைய மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்துவதுடன்,அது  தொடர்பில்  சுகாதார அமைச்சின் செயலாளரையும் அவருக்கு கீழ்  உள்ள  அதிகாரிகளையும் அழைத்து  கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21