எவன்கார்ட் விவகாரம் ; நிசங்க யாப்பா சேனா­தி­பதி சிங்கப்பூர் வைத்தியசாலையில்

Published By: Vishnu

09 Jul, 2019 | 10:10 AM
image

மிதக்கும் ஆயுத களஞ்­சி­ய­சாலை விவ­காரம் தொடர்பில், சட்டமா அதிபரினால் கைதுசெய்ய உத்தரவிடப்பட்டிரந்த எவன்கார்ட் மெரிடைம் நிறு­வ­னத்தின் தலைவர் நிசங்க யாப்பா சேனா­தி­பதி சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

மிதக்கும் ஆயுத களஞ்­சி­ய­சாலை விவ­காரம் தொடர்பாக நிசங்க யாப்பா சேனா­தி­பதி உள்­ளிட்ட எட்டு பேரைக் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கடந்த வார இறு­தியில் சட்ட மா அதிபரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணியுமான தப்­புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­ன­வுக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தார். 

 2015 ஆம் ஆண்டு காலி துறை முகத்­தி­லி­ருந்து சில கடல் மைல் தூரத்தில் வைத்து கைப்­பற்­றப்­பட்ட கப்­பலில் இருந்து மீட்­கப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்பில் விசா­ரிக்கும் சி.ஐ.டி. குழு, குறித்த 8 பேரையும் கைது செய்ய விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.  துப்­பாக்­கிகள், வெடி­பொ­ருட்கள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் இவர்­களைக் கைது  செய்ய சி.ஐ.டி. நட­வ­டிக்­கை எடுத்­துள்­ளது.

ஓய்­வு­பெற்ற இரா­ணுவ மேஜர் ஜெனரல் பாலித்த பெர்­னாண்டோ, ஓய்­வு­பெற்ற மேஜர் ஜெனரல் கரு­ணா­ரத்ன எகொ­ட­ வல, எவன்கார்ட் தலைவர் நிசங்க சேனா­தி­பதி, கடற்­படை ஓய்­வு­பெற்ற கொமாண்டர்  விஷ்­வஜித் நந்­தன திய­ப­ல­னகே, தற்­போ­தைய தேசிய பொலிஸ் ஆணைக் குழு வின் செய­லரும் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் மேல­திக செய­ல­ரு­மான சமன் திஸா­நா­யக்க,  ஓய்­வு­பெற்ற எயார் வைஸ் மார்ஷல்  பீ.டி.பிரே­ம­சந்ர,  பாது­காப்பு அமைச்சின் முன்னாள் மேல­திக செயலர் தம­யந்தி ஜய­ரத்ன, ரக்னா லங்கா நிறு­வ­னத்தின் தலைவர்  விக்டர் சம­ர­வீர ஆகி­யோ­ரையே இவ்­வாறு கைது செய்து மன்றில் ஆஜர்  செய்­யு­மாறு சட்ட மா அதி பர் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தார். 

இந் நிலையில் நேற்று ரக்னா லங்கா நிறுவன தலைவர் விக்டர் சமர வீர கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:07:39
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31