3400 ஆண்டுகளுக்கு பின் கண்டறியப்பட்ட பழமையான அரண்மனை

Published By: Digital Desk 3

09 Jul, 2019 | 10:50 AM
image

ஈராக் நாட்டில் 3400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு நீரில் மூழ்கிய அரண்மனை தற்போது வறச்சி காரணமாக வெளியே தென்பட்டுள்ளது.

ஈராக்கின் மிக முக்கிய நதியான தைகிறிஸ் நதி கடும் வறட்சி காரணமாக பல ஆண்டுகளுக்கு பின் வறண்டுள்ளது. நீண்ட காலமாக மழை இல்லாமை மற்றும் கடும் வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் குறித்த நதி வற்றியுள்ளது.  இந்நிலையில், நதி சென்று சேரும் மிகப்பெரிய அணையான மொசூல் அணையும் வறண்டு போயுள்ளது.

பல ஆண்டுகளாக நீரால் நிரம்பியிருந்த அந்த அணை, தற்போது வறண்டு மணல் பரப்பாக மாறியுள்ள வேளையில், அதன் உள்ளிருந்து பழங்கால அரண்மனை ஒன்று வெளியே தென்பட்டுள்ளது.

65 அடி ஆழத்தில் கண்டறியப்பட்ட இந்த அரண்மனை, 2 மீட்டர் அகலம் கொண்ட சுவர்களையும், பல அறைகளையும் கொண்டுள்ளது. மேலும் இந்த அரண்மனையை சுற்றி வீதிகளும், கல்லறை தோட்டமும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் தற்போது அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட ஆய்வில் இந்த அரண்மனை 3400 ஆண்டுகள் பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அங்கு ஒருசில எழுத்துருக்களும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ளும் நிலையில் மனித நாகரிக வளர்ச்சியை குறித்து புதிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59