ரஜினியின் 'கபாலி" அல்லது விஜயின் அட்லீ ஆகிய இரண்டு படங்களில் ஏப்ரல் 14 ஆம் திகதி எது வெளிவர இருக்கிறது என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.



ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கபாலி", விஜயின் அட்லீ ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்து வருகிறார் தாணு. 
மலேசியாவில் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பும், சென்னையில் அட்லீ படத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
அட்லீ படத்தின் படப்பிடிப்பு முன்னரே தொடங்கப்பட்டுவிட்டதால் முதலில் அதன் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு ஜனவரி வரை நடைபெற இருக்கிறது. மலேசியாவில் இன்னும் சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.


இந்நிலையில், ஏப்ரல் 14ம் திகதி தாணு எந்த படத்தை வெளியிட இருக்கிறார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.