மாண­வர்கள் கடத்­தப்­பட்­டமையை தாம் அறிந்­தி­ருந்தாக ஒப்புக்கொண்ட கரன்­ன­கொட..!

Published By: J.G.Stephan

08 Jul, 2019 | 11:34 AM
image

தெஹி­வ­ளையில் 5 மாண­வர்கள் கடத்­தப்­பட்டு, கிழக்கு கடற்­படை தலை­மை­ய­கத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததை அறிந்­தி­ருந்தார் என்­பதை முன்னாள் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் வசந்த கரன்­ன­கொட குற்ற விசா­ரணைப் பிரி­விடம் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

கொழும்பு பகு­தியில் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட 11 பேர் குறித்து விசா­ரித்து வரும் குற்ற விசா­ரணைப் பிரிவு கோட்டை நீதிவான் நீதி­மன்­றத்தில் அளித்­துள்ள ‘பி’ அறிக்­கை­யி­லேயே இந்த தகவல் கூறப்­பட்­டுள்­ளது.

தமது விசா­ர­ணை­களின்போதே தெஹி­வ­ளையில் 5 மாண­வர்கள் கடத்­தப்­பட்டு, கிழக்கு கடற்­படை தலை­மை­ய­கத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததை அறிந்­தி­ருந்தார் என்­பதை அட்­மிரல் வசந்த கரன்­ன­கொட ஒப்­புக்­கொண்டார் என்று அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

அத்­துடன்,  கடத்­தப்­பட்ட இளை­ஞர்­களைப் பற்றி முதன்­மு­தலில் 2009 மே 10ஆம் திகதி அறி­விக்­கப்­பட்ட போதும் கிழக்கு கடற்­படைத் தலை­மை­ய­கத்தில் இருந்த இளை­ஞர்­களை விடு­விப்­ப­தற்கு எந்த நட­வ­டிக்­கை­யையும் எடுப்­ப­தற்கு அட்­மிரல் கரன்­ன­கொட தவ­றி­விட்டார்  என்றும் குற்ற விசா­ரணைப் பிரி­வினர் கூறி­யுள்­ளனர்.

அவர் ஐந்து மாண­வர்கள் கடத்­தப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த  தக­வல்கள் குறித்து சரி­யாக கவ­னத்தில் எடுத்து செயற்­பட்­டி­ருந்தால் அந்த மாண­வர்கள் மற்றும் பல­வந்­த­மாக கடத்­தப்­பட்ட ஏனை­ய­வர்­க­ளையும் பாது­காத்­தி­ருக்க முடியும் என்றும் அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த மாண­வர்கள் தொடர்­பாக கடற்­படைப் புல­னாய்வு பணிப்­பாளர் றியர் அட்­மிரல் ஏ.கே.குருகே வழங்­கிய முக்­கி­ய­மான ஆதாரம் தொடர்­பாக, 2009 மே 28ஆம்  திகதி குற்றப் பிரிவு பிரதி  பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்­க­விடம் அளித்த முறைப்­பாட்டில் குறிப்­பிடத் தவ­றி­யது குறித்தும் அட்­மிரல் கரன்­ன­கொட மீது குற்­றச்­சாட்டு கூறப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம், குற்­றங்கள் தொடர்­பான ஆதாரங்களை மறைத்து குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைப் பாதுகாக்க அவர் முனைந்துள்ளார் என்று இப்போது தெரியவந்துள்ளது என குற்ற விசாரணைப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55