"சிங்­கள பௌத்த மத­வாத - இரா­ணுவ மேலா­திக்கம்: தமிழர், முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல சிங்­க­ள­வர்­க­ளுக்கும் ஒரு பிரச்­சி­னையே"

Published By: J.G.Stephan

08 Jul, 2019 | 10:49 AM
image

இலங்­கையில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்றைக் காண்­ப­தற்கு பிர­தான தடை­யாக இருப்­பது தற்­போ­தைய சிங்­கள மத­வாத  இரா­ணுவ மேலா­திக்­கமே என்று கூறி­யி­ருக்கும் நோர்வே சமூக விஞ்­ஞான அறி­ஞ­ரான  பேரா­சி­ரியர்  ஓவின்ட்  ஃபுக்­லெருட்  அந்த மேலா­திக்கம் தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு மாத்­தி­ர­ மல்ல, பல சிங்­க­ள­வர்­க­ளுக்கும் கூட ஒரு பிரச்­சி­னையே என்று குறிப்­பிட்­டி­ருக்­கிறார். 

வர­லாறு நெடு­கிலும் நிலை­நாட்­டப்­பட்டு வந்­தி­ருக்கும்  (குடிப்­ப­ரம்­ப­லு­டனும் மதங்­க­ளு­டனும்  மற்றும் சமூக -- பொரு­ளா­தா­ரத்­து­டனும் தொடர்­பு­டைய) முரண்­பா­டு­களின் பிரத்­தி­யே­க­மான சிக்­கல்­நி­லை­யொன்றை இலங்கை உரு­வ­கப்­ப­டுத்தி நிற்­ப­தா­கவும் அந்த சிக்­கலும் அர­சியல் தீர்­வுக்­கான முக்­கிய தடை­யாக விளங்­கு­கி­றது என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

ஒஸ்லோ பல்­க­லைக்­க­ழ­கத்தின் கலா­சார வர­லாற்று அருங்­காட்­சி­ய­கத்தில் சமூக மானி­ட­வியல் பேரா­சி­ரி­ய­ராகப் பணி­யாற்றும் ஓவின்ட் புலம்­பெயர் சமூக உரு­வாக்­கங்கள், கலா­சாரப் பிர­தி­நி­தித்­துவ மற்றும் அழ­கி­யலின் அர­சியல் உட்­பட பல துறை­களில் ஆராய்ச்­சி­செய்­வதில் அக்­க­றை­கொண்­டவர். இலங்கை நெருக்­கடி மற்றும் அதன் விளை­வுகள்  குறித்து பல நூல்­களை( வெளி­யு­லக வாழ்வு; புலம்­பெயர் தமிழ்ச் சமூ­கமும் தொலை­தூர தேசி­ய­வாதம் என்­பது உட்­பட -- Life on the Outside; the Tamil Diaspora and its Long Distance Nationalism) வெளி­யிட்­டி­ருக்கும் அவர் அண்­மையில் 'இலங்­கையில்  போரும் சமா­தா­னமும்; நோர்­வேயின் ஒரு தோல்­வியின் விளை­வுகள்' (War and Peace in SriLanka ; Consequences of a Norwegian Failure) என்று எழு­தி­யி­ருக்­கிறார்.

அந்த நூலை இப்­போது எழு­து­வ­தற்கு தன்னைத் தூண்­டிய கார­ணிகள் குறித்து திரு­கோ­ண­ம­லையை தள­மா­கக் ­கொண்­டி­யங் கும் மூலோ­பாய கற்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் இணை­யத்­த­ளத்­துக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் விளக்­க­ம­ளித்­தி­ருக்கும் பேரா­சி­ரியர்  ஓவின்ட்  இலங்­கையின் அண்­மைக்­கால அர­சியல் நிகழ்­வுப்­போக்­குகள் தொடர்­பா­கவும் கருத்­துக்­களைக் கூறி­யி­ருக்­கிறார்.

இலங்­கையில் சக­ல­ருக்­கு­மான சமா­தா­ன­மான எதிர்­காலம் ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்கு இருக்­கின்ற தடை­களை வெற்­றி­கொள்­வ­தற்கு ஒரே­யொரு பாதை இன வேறு­பா­டு­க­ளுக்கு அப்­பால்­சென்று முற்­போக்குச் சக்­திகள் பொது­நி­லைப்­பா­டொன்­றுக்கு வரு­வ­தே­யாகும். அத்­த­கைய தந்­தி­ரோ­பா யம் சாத்­தியம் இலங்­கையில் இருக்­கி­றது என்­பதை 2015 தேர்­தல்­களில் காணக்­கூடி ­ய­தாக இருந்­தது என்று கூறி­யி­ருக்கும் பேரா­சி­ரியர் ஓவின்ட்  அந்த தேர்­தல்­களில் அதி­கா­ரத்­துக்கு வந்­த­வர்கள் பரி­தா­ப­க­ர­மாக தோல்­வி­கண்­டதை முதலில் ஒத்­துக்­கொண்­ட­வர்­களில் தானும் ஒருவர் என்­ப­தையும் சொல்­லத்­த­யங்­க­வில்லை. 

கேள்வி: உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் இலங்கை அர­சியல் நிலை­வ­ரத்­தின்­மீது எத்­த­கைய தாக்­கத்தைக் கொண்­டி­ருக்கும் ? 

பதில்: நிச்­ச­ய­மாக அது அர­சியல் நிலை­வ­ரத்தில் பெரும் பாத­க­மான தாக்­கத்தைக் கொண்­டி­ருக்­கி­றது. குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளு டன் சம்­பந்­தப்பட்ட  முழு விவ­கா­ரத்­திலும் உள்ள புல­னாய்­வுத்­துறைத் தவ­று­களும் அர­சியல் குழப்­ப­நி­லையும் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் முற்­போக்குச் சிந்­த­னை­யில்­லாத அர­சியல் சக்­தி­களைப் பலப்­ப­டுத்­து­வது பெரும்­பாலும் சாத்­தியம்.

கேள்வி: 'இலங்­கையில் போரும் சமா­தா­னமும் நோர்­வேயின் ஒரு தோல்­வியின் விளை­வுகள்' என்று நூலை எழு­து­வ­தற்கு உங்­களை தூண்­டிய கார­ணங்கள் எவை? 

பதில்: இலங்­கையில் நோர்­வேயின் ஈடு­பாட்டை நோர்வே மக்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்­து­வதும் நோர்­வேயின் தலை­யீட்­டுக்­கான இலங்­கையின் வர­லாற்று மற்றும் அர­சியல் பின்­பு­லத்தை அவர்­க­ளுக்கு விளக்­கு­வ­துமே இந்த நூலை எழு­தி­ய­தற்­கான பிர­தான  கார­ண­மாகும். நோர்­வேயின் தோல்வி இலங்­கையில் பாரிய விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது என்­ப­தையும் அதனால் இன்­னமும் கூட இலங்தை அவ­லப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது என்­ப­தையும் நோர்வே பொது­மக்­க­ளுக்கு விப­ர­மாக தெரி­ய­வைக்­க­ வேண்­டி­யி­ருக்­கி­றது.

இந்த நூலை வெளி­யி­டு­வ­தற்கு 2019 மே மாதத்தை நான் தெரிவு செய்­த­தற்கு காரணம் போர் முடி­வுக்கு வந்து பத்து வரு­டங்கள் நிறை­வ­டைந்த தருணம் கடந்த கால நிகழ்­வு­களைத் தொகுத்துப் பார்ப்­ப­தற்கு இயல்­பா­கவே பொருத்­த­மா­னது என்று நான் நம்­பி­ய­தே­யாகும். அத்­துடன் இலங்கை இன்­னொரு ஜனா­தி­பதி தேர்­தலை இப்­போது எதிர்­நோக்­கி­யி­ருக்­கி­றது. என்னைப் பொறுத்­த­வரை தற் ­போ­தைய சூழ்­நி­லையில் ஜனா­தி­பதி தேர் தல் தவ­றான திசை­யி­லான இன்­னொரு நட­வ­டிக்­கை­யாகும் என்றே சொல்வேன்.

நோர்­வேயின் அனு­ச­ர­ணை­யு­ட­னான சமா­தான முயற்­சிகள் இலங்­கையில் கூடு­த­லான அள­வுக்கு வன்­மு­றை­யு­ட­னான புதிய வர­லாற்றுக் கட்­ட­மொன்றின் தொடக்­கத்தை குறித்து நின்­றது. மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக வந்­ததும் மென்­மை­யான போக்­கிற்கு இட­மில்­லாமல் போய்­விட்­டது.ஆனால், தமி­ழர்கள் ஜனா­தி­பதி தேர்­தலை பகிஷ்­க­ரிப்­ப­தற்கு நெருக்­கு­தலைக் கொடுத்­த தன் மூல­மாக விடு­தலைப் புலிகள் ராஜ­பக் ஷ அதி­கா­ரத்­துக்கு வரு­வ­தற்கு உத­வி­னார்கள் என்­பதை நாம் மறந்­து­வி­டக்­கூ­டாது.

அதை­ய­டுத்து தோன்­றிய சூழ்­நி­லை­களில் சிங்­க­ளவர்  -- தமிழர் பிளவின் இரு­ம­ருங்­கிலும் தேசி­ய­வாத சக்­திகள் பல­ம­டைந்­தது மாத்­தி­ர­மல்ல, முன்­னரைக் காட்­டிலும் தீவி­ர­மான நிலைப்­பா­டுகள் மேலோங்­கின. இது எனது நூலின் உள்­ளார்த்­த­மான தொனிப்­பொ­ரு­ளாக அமைந்­தி­ருக்­கி­றது. சமா­தான முயற்­சி­களை மதிப்­பீடு செய்­வதை பிர­தா­ன­மான நோக்­க­மாக நூல் கொண்­டி­ருக்­க­வில்லை. சமா­தான முயற்­சி­களை நீண்ட வர­லாற்றுப் போக்கில் வைத்துப் பார்த்து அவற்றின் தோல்­வியின் வர­லாற்று ரீதி­யான விளை­வு­களைப் பற்றி (போரின் முடி­வுக்குப் பின்­ன­ரான பத்து வரு­டங்­க­ளுக்குப் பிறகு) சில விட­யங்­களைச் சொல்­வதே எனது நோக்கம்.

கேள்வி: நோர்­வேயின் சமா­தான முயற்­சிகள் பற்றி இப்­போது எவ்­வாறு மதிப்­பி­டு­கி­றீர்கள்?  சமா­தான முயற்­சி­க­ளின்­போது செயற்­பட்­டதை விடவும் வேறு­பட்ட முறையில் நோர்வே அதன் பாத்­தி­ரத்தை எவ்­வாறு வகித்­தி­ருக்­க­மு­டியும் என்று நீங்கள் நோக்­கு­கி­றீர்கள்?

 பதில்: நோராட் நிறு­வ­னத்­தினால் செய்­யப்­பட்டு 2011 ஆம் ஆண்டில் ' சமா­தா­னத்தின் பகடைக் காய்கள் ' என்ற தலைப்­புடன்  அறிக்­கை­யாக வெளி­யி­டப்­பட்ட மதிப்­பீட்டை பொதுவில் நான் ­ஏற்­றுக்­கொள்­கிறேன்.இதைப் பற்றி பல விட­யங்களைச் சொல்­ல­மு­டியும். அது ஒரு நீண்ட கதை. சுருக்­க­மாகச் சொல்­லப்­போனால், அனு­சர­ ணை­யாளர் என்றவகையில் நோர்வே மிகவும் பல­வீ­ன­மா­ன­தா­கவே இருந்­தது.சமா­தான முயற்­சிகள் ஆரோக்­கி­ய­மா­ன­வை­யா­கவும் வெற்­றியை நோக்கி முன்­னே­றக்­கூ­டி­ய­வை­யா­கவும் அமை­வ­தற்கு தேவை­யான நிபந்­த­னை­களை விதிக்க இய­லா­த­தாக நோர்வே இருந்­தது.

விடு­தலைப் புலி­களும் அன்­றைய இலங்கை அர­சாங்­கமும் விரும்­பி­யி­ருந்­தாலும் கூட, இரு தரப்­பு­க­ளுடன் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட சமா­தான முயற்­சியை ஏற்­பாடு செய்­வ­தற்கு நோர்வே இணங்­கிக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டாது என்­பதே எனது அபிப்­பி­ராயம். பிரச்­சி­னையில் சம்­பந்­தப்­பட்ட பல தரப்­பு­களை உள்­ள­டக்­காமல் முன்­னெ­டுக்­கப்­ப­டக்­கூ­டிய  எந்­த­வொரு செயன்­மு­றை­யி­னாலும் இறு­தித்­தீர்வைக் கொண்­டு­வர முடி­யாது என்­பது இலங்­கையின் கடுஞ்­சிக்­க­லையும் அதன் அர­சி­யலின் விளங்­காப்­பு­திர்­க­ளையும் பற்றி அடிப்­படை அறி­வைக்­கொண்ட எவ­ருக்­குமே தெரிந்­தி­ருக்­க­வேண்டும். மற்­றைய தரப்­பு­களைச் சேர்க்­கக்­கூ­டாது என்­ப­துதான் விடு­தலைப் புலி­க­ளி­னதும் அர­சாங்­கத்­தி­னதும் நிபந்­த­னை­யாக இருந்­தி­ருந்தால், நோர்வே சமா­தான முயற்­சி­களில் இருந்து விலகி கூடுதல் வலி­மையும் துடிப்பும் கொண்ட தரப்­பு­க­ளுக்கு இடம்­விட்­டி­ருக்­க­வேண்டும். அதே­போன்றே நிலை­வ­ரங்கள் குழம்­பத்­தொ­டங்­கி­ய­போது தொடர்ந்தும் தனது பாத்­தி­ரத்தை வகிப்­பதை கைவிட்­டு­விட்டு சமா­தான முயற்­சி­களில் இருந்து நோர்வே வெளி­யே­றி­யி­ருக்­க­வேண்டும்.

கேள்வி: விடு­தலைப் புலி­களை அழிப்­ப­தற்கு உல­க­ளா­விய ஆத­ர­வுடன் முழு அள­வி­லான இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை தொடங்­கு­வ­தற்கு முன்­ன­தாக சமா­தான முயற்­சி­களின் ஊடாக விடு­தலைப் புலி­களை தனி­மைப்­ப­டுத்­து­கின்ற ஒரு சர்­வ­தேச பாத்­தி­ரத்தை நோர்வே வகித்­தது என்று சில தமி­ழர்கள் குற்­றஞ்­சாட்­டு­கி­றார்கள். நோர்வே நல்ல முகத்­தையும் தீய திட்­டத்­தையும் கொண்­டி­ருந்­த­தாக அவர்கள் குறை­கூ­று­கி­றார்கள். இந்த குற்­றச்­சாட்டை நீங்கள் எவ்­வாறு நோக்­கு­கி­றீர்கள்? 

 பதில்: என்னால் இந்த வாதத்தை புரிந்­து­கொள்­ள­மு­டி­ய­வில்லை. எவ்­வாறு தனி­மைப்­ப­டுத்­து­வது? இதற்கு எதி­ரான கருத்­தையே எனது நூலில் நான் முன­்வைத்­தி­ருக்­கிறேன். சமா­தான முயற்­சி­க­ளின்­போது அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றியம், ஜப்பான் மற்றும் உல­க­வங்கி போன்ற முக்­கி­ய­மான சர்­வ­தேச  தரப்­பு­க­ளுடன் ஊடாட்­டங்­களைச் செய்­வ­தற்­கான வாய்ப்பு விடு­தலைப் புலி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது.அந்த தரப்­பு­களும் அதை அங்­கீ­க­ரித்­துக்­கொண்டு அந்த இயக்­கத்­தி­ன­ருடன் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­த­னர். விடு­தலைப் புலி­களைப் போன்ற இயக்­கங்­க­ளுக்கு அத்­த­கைய வாய்ப்புக் கிடைப்­ப­தென்­பது பெரும்­பாலும்  முன்­னொ­ரு­போதும் இல்­லாத ஒன்­றாகும். விடு­தலைப் புலிகள் அதற்கு எவ்­வாறு பதில் செயற்­பாட்டைக் காட்­டி­னார்கள்? வெளி­யு­றவு அமைச்சர் லக் ஷ்மன் கதிர்­கா­மரைக் கொன்­றார்கள். இது தானா சர்­வ­தேச அர­சி­யலை நடத்தி அர­சியல் தனி­மைப்­பாட்டை வெற்­றி­கொள்­வ­தற்­கான பாதை என்று விடு­தலை புலி­களை தனி­மைப்­ப­டுத்த முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக வாதம் செய்­ப­வர்கள் தங்­களைத் தாங்­களே கேட்­க­வேண்டும்.

1994 ஆம் ஆண்டில் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஆக்­க­பூர்­வ­மான முறையில் தொடங்­கிய முன்­மு­யற்­சிக்கு உகந்த முறையில் பதி­ல­ளிப்­ப­தற்கு கிடைத்த வாய்ப்பை விரயம் செய்­ததைப் போன்றே சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­களில் இருந்து வெளி­யே­றி­யதன் மூலம் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த சந்­தர்ப்பம் ஒன்­றையும் விடு­தலைப் புலிகள் தவ­ற­விட்­டார்கள் என்­பதே எனது அபிப்­பி­ராயம்.இந்த விட­யங்கள் குறித்து 2009 க்கு பிறகு தமிழ் அர­சியல் வட்­டா­ரங்­களில்  பெரி­தாக விவாதம் எதுவும் நடக்­க­வில்லை என்­பது எனக்கு ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது.

கேள்வி: இலங்கை விவ­கா­ரத்தில் அதுவும் குறிப்­பாக தோல்­வி­ய­டைந்த சமா­தான முயற்­சி­களின் பின்­பு­லத்தில் தமி­ழர்கள் மீதான நோர்­வேயின் கடப்­பாடு பற்­றிய உங்கள் அபிப்­பி­ராயம் என்ன? 

பதில்: இலங்கை நிலை­வ­ரத்தில் அதுவும் குறிப்­பாக ஈழ தமிழ் இனத்தின் நிலை­வ­ரத்தில் ஈடுபாடு காட்டுவது தொடர்பில் நோர்வேக்கு கடப்பாடொன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவ்வாறு கடப்பாடு என்று நோக்குவதானால் அது நெறிமுறை சார்ந்தததே தவிர, சட்டரீதியானதல்ல. நோர்வேயின் அரசியல் ஆளும் வர்க்கம் அதன் சொந்த தவறுகள் அல்லது தோல்விகள் குறித்து கடுமையான சுயவிசாரணை செய்து பார்க்கவேணடும்; அதன் தோல்விகளே இலங்கையின் வடக்கு -- கிழக்கில் இன்னமும் நிலவுகின்ற துயர்நிறைந்த சூழ்நிலைக்கு காரணமாக இருக்கின்றது என்பதை ஏற் றுக்கொள்ள வேண்டும்.

இத்தகைய சுயவிசா ரணை ஒருபோதும் நோர்வேயில் இடம் பெறவில்லை. நான் இந்த நூலை எழுதி யதற்கான காரணங்களில் அதுவும் ஒன்று.

கேள்வி: இலங்கையில் சர்வதேச சமூகம் எத்தகைய பாத்திரத்தை வகிக்கும் ? 

பதில்: இது ஒரு பெரிய கேள்வி.ஏனென்றால் சர்வதேச சமூகம் ஒன்று இல்லை.  நிச்சயமாக என்னால் சொல்ல முடியாவிட்டாலும் கூட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொட ர்பில் ஐ.நா.வின் பொறுமை ஏதாவது ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன். இவ்வருட இறுதியில் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்த லில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்  ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அத்தகையதொரு நிலை வரலாம். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை முன்கூட்டியே சொல்வது கஷ்டமானது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41