மொரகஹகந்த வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும் ஏனைய வேலைத்திட்டங்களையும் துரிதமாக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை.

Published By: Digital Desk 4

07 Jul, 2019 | 10:17 PM
image

மொரகஹகந்த - களுகங்கை வேலைத்திட்டதுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும் ஏனைய நீர்ப்பாசன வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தி அவற்றின் நன்மைகளை குறித்த பிரதேச விவசாய மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  பணிப்புரை விடுத்துள்ளார்.

நீருக்காக கண்ணீர் வடித்த விவசாயிகளின் துயரங்களை தீர்த்துவைக்கும் முகமாக ஜனாதிபதியின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் மொரகஹகந்த - களுங்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஏனைய நீர்ப்பாசன வேலைத்திட்டங்களான வயம்ப கால்வாய், மினிப்பே கால்வாய் மற்றும் எலஹெர கால்வாய் போன்றவற்றின் அபிவிருத்தி பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. 

2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மொரகஹகந்த - களுங்கங்கை வேலைத்திட்டத்தினூடாக வடமத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்தில் வசிக்கும் மக்களுக்கு தூய குடிநீர் வழங்குதல் மற்றும் பயிர்ச்செய்கைக்கான நீரினை வழங்குதல் நோக்காக கொண்டுள்ளது. 

தற்போது இந்த வேலைத்திட்டத்தினுள் வயம்ப கால்வாய் வேலைத்திட்டமும் உள்ளடக்கப்பட்டதுடன்இ வேமடில்ல குளம் மற்றும் நீர்த்தேக்கம் உள்ளிட்ட வடமேல் மாகாணத்திலுள்ள குளங்களை நீரினால் தன்னிறைவடையச் செய்யும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக வடமேல் மாகாணத்தின் வெவ்வேறு அளவிலான 303 குளங்களுக்கு நீர் விநியோகிக்கப்படும். 

எலஹெர உப வேலைத்திட்டத்தினூடாக மொரகஹகந்தயிலிருந்து நாச்சதுவ குளம் வரை 94 கிலோமீற்றர் கால்வாய் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. 

இதனூடாக அநுராதபுர மாவட்டத்தின் பிரதான குளங்களாக கருத்தப்படும் நுவர வெவ, நாச்சதுவ, திசா வெவ, குறுளு வெவ உள்ளிட்ட வெவ்வேறு அளவிலான 1,600 குளங்களுக்கு நீர் விநியோக்கிப்படும். 

பழைமை வாய்ந்த அம்பன் கங்கையினூடாக மொரகஹகந்த, பொலன்னறுவை மற்றும் திருகோணமலைக்கு கிடைக்கும் நீரின் ஊடாக கிரித்தலே, பாராக்கிரம சமுத்திரம், கவுடுல்ல, கந்தளாய் ஆகிய குளங்களுக்கும் நீர் கொண்டு செல்லப்படுகிறது. 

மேலும் மொரகஹகந்தயிலிருந்து கந்தளாய் பிரதேச பயிர்ச்செய்கைக்கு நீரினை திறந்து விடுமாறும் ஜனாதிபதி அவர்கள் விடுத்த பணிப்புரைக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதற்கமைய இந்நீரானது அம்பன் கங்கையினூடாக எலஹெர, மின்னேரிய, கவுடுல்ல மற்றும் கந்தளாய் விவசாய கிராமங்களின் விவசாயிகளுக்கு சிறுபோக நடவடிக்கைகளுக்கு நீர் விநியோகிப்பட்டுள்ளதாக வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான காரியாலயம் தகவல் தெரிவித்துள்ளது.

களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர் நிறைக்கும் வேலைத்திட்டங்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதுடன்,  நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதன் காரணமாக பாதிப்புக்குள்ளான 24 கிராமங்களைச் சேர்ந்த 3,000 பேரின் விவசாய நடவடிக்கைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட 16 குளங்கள் உள்ளிட்ட கால்வாய்களுக்கு நீரை விநியோகிக்கும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன் மொரகஹகந்த - களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை பாராட்டும் முகமாக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை முற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் மொரகஹகந்த வளாகத்தில் இடம்பெறவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04