கனடாவில் பாரிய காட்டுத் தீ; 80,000 பேருக்கு இடம்பெயர உத்தரவு

Published By: Raam

05 May, 2016 | 07:47 AM
image

கன­டாவின் அல்­பேர்ட்டா பிராந்­தி­யத்தில் பரவி வரும் பாரிய காட்டுத் தீ கார­ண­மாக அந்தப் பிராந்­தி­யத்­தி­லுள்ள மக்­முர்ரே நகரைச் சேர்ந்த அனைத்து 80,000 மக்­களும் இடம்­பெ­யரும் நிர்ப்­பந்­தத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

காட்டுத் தீயை­ய­டுத்து செவ்­வாய்க்­கி­ழமை அந்­ந­க­ரி­லுள்ள அனை­வ­ரையும் வெளி­யேற உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இந்தக் காட்டுத் தீயால் அந்­ந­க­ரி­லி­ருந்து வெளியே­று­வ­தற்­கான ஒரே பாதை­யாக உள்ள 63 ஆம் இலக்க நெடுஞ்­சா­லையில் பெரும் வாகன நெரிசல் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்தப் பிராந்­தி­யத்­தி­லான எண்ணெய் தன்­மை­யான மண் கார­ண­மாக தீ வேக­மாக பரவி வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இந்தத் தீயால் அந்த நக­ரி­லுள்ள வீடு­களும் பெற்றோல் நிலை­யங்­களும் ஹோட்­ட­லொன்றும் எரிந்து கரு­கி­யுள்­ளன.

மேற்­படி காட்டுத் தீ அனர்த்தம் கார­ண­மாக அந்தப் பிராந்­தியம் வர­லாறு காணாத இடம்­பெ­யர்­வொன்றை எதிர்­கொண்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்த அனர்த்தத்தில் சிக்கி பிராந்திய எதிர்க்கட்சி தலைவரின் வீடும் தீக்கிரையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52