ஒரே அத்தியாயத்தில் ஐந்து சதங்களை குவித்த ரோகித் !

Published By: Vishnu

07 Jul, 2019 | 09:50 AM
image

(இங்கிலாந்தின் லீட்ஸ் விளையாட்டரங்கிலிருந்த நெவில் அன்தனி)

44 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஒரே அத்தியாயத்தில் ஐந்து சதங்கள் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை இந்தியாவின் ரோஹித் ஷர்மா நிலைநாட்டியுள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் தனது நான்காவது சதத்தைப் பூர்த்திசெய்து ஒரே அத்தியாயத்தில் நான்கு சதங்கள் குவித்தவர்கள் பட்டியலில் இலங்கையின் குமார் சங்கக்காரவுடன் இணைந்துகொண்ட ரோஹித் ஷர்மா, இலங்கைக்கு எதிராக லீட்ஸ், ஹெடிங்லே விளையாட்டரங்கில் அந்த சாதனையை இலங்கைக்கு எதிரான போட்டியில் இன்று முறியடித்து புதிய சாதனையாளரானார்.

அத்துடன் கடைசி மூன்று போட்டிகளில் ரோஹித் ஷர்மாக தொடர்ச்சியாக சதங்களைக் குவித்துள்ளார்

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக சௌத்ஹம்படனில் ஆட்டமிழக்காமல் 122 ஓட்டங்களையும் (ஜூன் 5), இங்கிலாந்துக்கு எதிராக பேர்மிங்ஹாமில் 102 ஓட்டங்களையும் (ஜூன் 30), பங்களாதேஷுக்கு எதிராக பேர்மிங்ஹாமில் 104 ஓட்டங்களையும் (ஜூலை 2) குவித்த ரோஹித் ஷர்மாக நேற்றைய போட்டியில் இலங்கைக்கு எதிராக 103 ஓட்டங்களைப் பெற்றார். 

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் 5 சதங்கள், ஒரு அரைச் சதத்துடன் 647 ஓட்டங்களைப் பெற்றுள்ள ரோஹித் ஷர்மா முதலிடத்தில் இருப்பதுடன் உலகக் கிண்ண வரலாற்றில் ஒரே அத்தியாயத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (673), அவுஸ்திரேலியாவின் மெத்யூ ஹேடன் (659) ஆகியோருக்கு அடுத்ததாக மூன்றாம் இடத்தில் இருக்கின்றார்.

இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது. 

இந்தியா இலகுவான வெற்றி

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஒரு கட்டத்தில் 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலெ மெத்யூஸ் (113), லஹிரு திரிமான்ன (53) ஆகிய இருவரும் ஐந்தாவது விக்கெட்டில் 124 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையை கௌரவமான நிலைக்கு இட்டுச் சென்றார்.

இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 41.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

ரோஹித் ஷர்மாவும் லோக்கேஷ் ராகுலும் (111) முதலாவது விக்கெட்டில் 184 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடரந்;து விராத் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற இந்தியா இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35