வேலூரில் மீண்டும் கதிர் ஆனந்த்

Published By: Daya

06 Jul, 2019 | 04:29 PM
image

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதி கட்சி தலைவரான ஏசி சண்முகம் , தி.மு.க. கூட்டணியின் சார்பில் கதிர் ஆனந்த்  போட்டியிடுவார்கள் என்று அக்கட்சிகளின் தலைமை அறிவித்திருக்கிறது.

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஒகஸ்ட் 5ஆம்  திகதியன்று தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வரான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலின் போது ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஒகஸ்ட் மாதம்  ஐந்தாம் திகதி நடைபெற உள்ள தேர்தலில், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தி.மு.க. தலைவரான மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,“ அடுத்த மாதம் 5 ஆம் திகதியன்று நடைபெறவிருக்கும் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுவார்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடைபெற்று முடிவடைந்த மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வந்த சூழலில், தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல இலட்ச ரூபா பணம் கைப்பற்றப்பட்டது.

அத்துடன் தி.மு.க.வின் நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையிலும் பல கோடி ரூபா நாணயத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஒகஸ்ட் 5 ஆம் திகதியன்று நடைபெற்ற பின், வாக்கு எண்ணிக்கை ஒகஸ்ட் 9 ஆம் திகதியன்று நடைபெற்று, அன்று மாலையே முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17