(பா.ருத்ரகுமார்)

மக்களுக்கான நீதியை நிலைநாட்டும் சபையில் அநாகரிகமாக நடந்துக்கொள்வது மக்களை அவமானப்படுத்துவது போன்றதாகும்.  இவ்வாறு நடந்துக்கொண்டவர்களை தண்டிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என  அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். 

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை போன்று  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் முன்னாள் அமைச்சர் அனுருத்த ரத்வத்தவுக்கு கூட வரலாற்றில் பாதுகாப்பு வழங்கப்பட்டவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சில இராணுத்தினர் விஷேட பயிற்சி பெற்றவர்கள் அல்ல, அவர்கள் பிற தொடர்பு காரணமாக அவருக்கு அருகில் இருந்தவர்கள்   எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேல்மாகாணசபையின் பிரதான அமைச்சுக்காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போது  மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான கருத்துக்கள் குறித்து ஊடகவியளாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே   அவர் மேற்கண்டவாறு   தெரிவித்தார்.