பாராளுமன்ற மோதல்; குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை : அரசாங்கம் கூறுகிறது 

Published By: MD.Lucias

04 May, 2016 | 06:58 PM
image

(ஆர்.யசி)

பாராளுமன்றத்தில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகள் யாரென கண்டறியவும் அவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் இரு பிரத்தியேக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற குழுவும், பொலிஸ் குற்றப்புலனாய்வு விசாரனைப்பிரிவும்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

குற்றவாளிகள் இனங்காணப்பட்டால் பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய ஒழுக்காற்று நடவடிக்கையும், குற்றபிரிவின் அடிப்படையிலும் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். 

 அமைச்சரவை இணை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக குறிப்பிடுகையில், 

மக்களினால் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றதுக்கு அனுப்பப்படும் பிரதிநிதிகள் அங்கு மக்களின் பிரச்சினைகளை பேசவேண்டும். நாட்டை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.  அதைவிடுத்து பாராளுமன்றத்தை யுத்த களமாக மாற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் மோதிக்கொள்வது மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.  தமது மிருகத்தனமான செயற்பாடுகளை பாராளுமன்றத்தின் வெளியில் வைத்துக்கொள்ள வேண்டும். 

எவ்வாறு இருப்பினும் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஒரு குடும்பத்தை சார்ந்து நாடு உள்ளது என்பதை தொடர்ந்தும் உறுதிப்படுத்த   முயற்சிக்கவே இவ்வாறு நடந்துகொண்டனர். ஆனால் இப்போது மஹிந்தவின் ஆட்சிக்காலம் இல்லை. அந்த காலம் மக்களால் மாற்றப்பட்டுவிட்டது. வாத பிரதிவாதங்கள், விவாதங்கள், வாக்குவாதங்கள் நடத்த முடியும்.ஆனால் மோதல்களை நடத்த எவருக்கும் அதிகாரம் இல்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58