மனைவியை கொன்று  குளிர்சாதனை பெட்டியில் வைத்திருந்த நபருக்கு மரண தண்டனை

Published By: Daya

05 Jul, 2019 | 05:05 PM
image

சீனாவில் மனைவியை கொன்று 106 நாட்களாக குளிர்சாதனைபெட்டியில் மறைத்து வைத்திருந்த நபருக்கு ஷங்காய் நீதிமன்றம் மரண தண்டனையை உறுதிப்படுத்தி உள்ளது.

சீனாவின் ஹாங்கோ பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான ஜூ சியாடோங்  ஒரு ஆடைக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி 30 வயதான யாங் லிப்பிங் பாடசாலையில்  ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

 ஜூ-யாங் இருவருக்கும் திருமணமானதில் இருந்தே சிறுசிறு சண்டைகள் வந்துள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த ஜூ, யாங்கின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டார். பின்னர் இதனை மறைக்க வேண்டும் என்பதற்காக யாங்கின் உடலை வீட்டிலேயே வைக்க குளிர்சாத பெட்டி ஒன்றை ஒன்லைனில் கொள்வனவு செய்துள்ளார்.

இப்போது ஏன் அவசரமாக அதிக விலை கொடுத்து குளிர்சாத பெட்டி வாங்குகிறாய் என அருகில் வசித்தவர்கள் கேட்டபோது, ‘செல்லமாக வளர்க்கும் பாம்புகள், பல்லிகள், தவளைகளுக்கு உணவு சேமிப்பதற்காக வாங்கியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார். 

பின்னர் வீட்டின் பால்கனியிலேயே அவரது சடலத்தை குளிர்சாத பெட்டி அடைத்து, மறைத்து வைத்துள்ளார். பின்னர் மனைவியை தானே கொன்றதை மறக்க வெளியூர்கள் சென்று ஜூ சுற்றித்திரிந்துள்ளார்.

இதற்காக மனைவியின் கணக்குகளில் இருந்தே பணம் பெற்றுள்ளார். மேலும் மனைவியின் பெற்றோர், நண்பர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக யாங்கின் தொலைபேசியிலிருந்து அனைவருக்கும் குறுஞ்செய்திகள் மூலம் பேசியுள்ளார்.

இத்தனை டிரிக்கினை செய்துவிட்டு சுதந்திரமாக சுற்றித்திரிந்த ஜூ, யாங்கின் தாய் பிறந்தநாள் விழாவிற்காக அழைப்பு விடுத்துள்ளார். செய்வதறியாது திகைத்த ஜு பயத்தில், உண்மையை தெரிவித்து பொலிஸில் சரண் அடைந்தார். 

பொலிஸார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹாங்காய் நீதிமன்றில் குறித்த வழக்கு வந்தது. இதில் ஜூவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து ஜூ மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல் முறையீட்டை ஏற்று  நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த ஹாங்காய் நீதிமன்றம் , ஜூங்கிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையில் எந்த மாற்றமும் இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17