உலகக் கிண்ண வாழ்க்கைக்கு விடைகொடுத்த 'Universe Boss' 

Published By: Vishnu

05 Jul, 2019 | 01:11 PM
image

கிரிக்கெட் அரங்கில் 'Universe Boss' (யுனிவர்ஸ் பாஸ்) என அழைக்கப்படும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லின் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

நடப்பு சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற ஆட்டமே இவரது இறுதி ஒருநாள் உலகக் கிண்ண ஆட்டாக அமைந்துள்ளது.

சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தாலும் 39 வயதாகும் கிறிஸ் கெய்ல், டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளின் ஓய்வு குறித்து இன்னும் வாய் திருக்கவில்லை.

அண்மையில் கிறிஸ் கெய்ல், உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகும் விளையாட திட்டமிட்டு இருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான் விளையாட வாய்ப்பு உள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நிச்சயம் ஆடுவேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இவர் இதுவரை மொத்தமாக ஐந்து (2003, 2007, 2011, 2015, 2019)சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் விளையாடியுள்ளார்.

அந்த ஐந்து தொடர்களிலும் :

1,186 ஓட்டங்கள்

2 சதங்கள்

16 விக்கெட்டுக்கள்

215 அதிகூடிய ஓட்டம்

49 சிக்ஸர்களையும் பெற்றுள்ளார்.

1999 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் கால்பதித்த கிறிஸ் கெய்ல் தனது 20 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை மொத்தமாக 527 இன்னிங்ஸுக்களை எதிர்கொண்டு 19,234 ஓட்டங்களை குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டி

103 டெஸ்ட் கோட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல் 182 இன்னிங்ஸுக்களை எதிர்கொண்டு 15 சதம் 37 அரைசதம் அடங்கலாக 7,214 ஓட்டங்களை குவித்துள்ளார்.

பந்து வீச்சில் 73 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

ஒருநாள் போட்டி 

298 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல் 291 இன்னிங்ஸுக்களை எதிர்கொண்டு 25 சதம், 53 அரைசதம் அடங்கலாக 10,393 ஓட்டங்களை குவித்துள்ளார்.

பந்து வீச்சில் 165  விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இதுபதுக்கு - 20

58 இதுபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல் 54 இன்னிங்ஸுக்களை எதிர்கொண்டு 2 சதம், 13 அரைசதம் அடங்கலாக 1,627 ஓட்ங்களை குவித்துள்ளார்.

பந்து வீச்சில் 17 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09