‍‍இமாலய இலக்கை எட்ட வேண்டிய நிலையில் பாகிஸ்தான்!

Published By: Vishnu

05 Jul, 2019 | 11:39 AM
image

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 43 ஆவது போட்டி சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் மோர்த்ரசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கிண்ணத் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகளில் நளையுடன் முடிவடைகிறது. அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு நுழைந்து விட்ட நிலையில் இன்றைய ஆட்ட முடிவில் அரையிறுதிக்குள் நுழையும் அணி எது என்பது உறுதியாகிவிடும். 

பாகிஸ்தான் அணி 8 போட்டிகளை எதிர்கொண்டு 4 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பெற்றுள்ளதுடன் ஒரு போட்டி மழையால் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது.

9 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் அதன் புள்ளிகள் 11 ஆக அதிகரிக்கும். அப்போது நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தலா 11 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். இதையடுத்து ரன்-ரேட் அடிப்படையில் ஒரு அணி அரையிறுதிக்கு தேர்வாகும்.

நியூசிலாந்து +0.175 என்று ரன்ரேட்டில் வலுவாக காணப்படுகிறது. பாகிஸ்தானின் ரன்ரேட் -0.792 என்று மிகவும் பின்தங்கி உள்ளது. எனவே நியூசிலாந்தின் ரன்ரேட்டை பாகிஸ்தான் முந்த வேண்டும் என்றால் இமாலய வெற்றி இன்றைய ஆட்டத்தில் பெற வேண்டும்.

எனவே தற்போதைய சூழநிலையில் பாகிஸ்தானால் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது.

பங்களாதேஷ் அணி 8 போட்டிகளை எதிர்கொண்டு 3 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி மழையால் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது.

7 புள்ளிகளுடன் பட்டியலில் 7 ஆவது இடத்தில் இருக்கும் பங்களாதேஷ் அரையிறுதிக்கான வாய்ப்பினை இழந்து விட்ட நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்று தாயம் திரும் வேண்டும் என்ற நிலையுடன் இப் போட்டியில் களமிறங்குவார்கள்.

சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை ஒரு போட்டியில் மாத்திரம் மோதியுள்ளன. அப் போட்டியில் பங்களாதேஷ்  அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31