ஆயுதக் களைவு குறித்து அமெ­ரிக்­கா­வுடன்  பேச்­சு­வார்த்தை நடத்த ரஷ்யா தயா­ரா­க­வுள்­ளது

Published By: R. Kalaichelvan

05 Jul, 2019 | 10:41 AM
image

ஆயுதக்களைவு மற்றும் தந்­தி­ரோ­பாய ஸ்திரத்­தன்மை குறித்து அமெ­ரிக்­கா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்த ரஷ்யா தயா­ரா­க­வுள்­ள­தாக  ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் நேற்று தெரிவித்துள்ளார்.

இத்­தா­லிய பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு அளித்த பேட்­டி யின் போதே அவர் இவ் ­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­புடன் ஜப்­பானில் இடம்­பெற்ற உச்­சி­மா­நாட்டின் போது கலந்­து­ரை­யா­டி­ய­தாக அவர் கூறினார்.

ஆயுதக் களைவு  தொடர்பில் உறு­தி­யான  நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது சர்­வ­தேச ஸ்திரத்­தன்­மைக்கு பங்­க­ளிப்புச் செய்யும் என அவர் தெரி­வித்தார்.

விளா­டிமிர் புட்டின்  முக்­கிய அணு ஆயுத உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து தனது நாட்டை வாபஸ் பெறு­வ­தற்­கான சட்­ட­மூ­ல­மொன்றில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை  கைச்­சாத்­திட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

1987ஆம் ஆண்டு  அமெ­ரிக்­கா­வுடன் செய்து கொள்­ளப்­பட்ட இடை­நிலை அணு ஆயுதப் படை உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து ரஷ்யா வெளியே­று­வதை நடை­மு­றைப்

­ப­டுத்­து­வ­தற்­கான  ஆணை­யொன்றை புட் டின் அன்­றைய தினம் வெளியிட்­டி­ருந்தார்.

அணு ஆயுதப் போர் ஒன்று ஏற்­படும் அபா­யத்தை  தடுக்கும் முக­மாக கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்த அந்த உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா ஏற்­க­னவே வில­கி­ய­தற்கு பதி­லடி கொடுக்கும் முக­மா­கவே   மேற்­படி நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அத்­துடன் ரஷ்­யா­வா­னது  தனது இரு புதிய  சக்தி வாய்ந்த கப்­பல்­களை  பயிற்சி நட­வ­டிக்­கை­யொன்­றுக்­காக  நோர்வே கடல் பிராந்­தி­யத்­துக்கு அனுப்பி வைத்­தி­ருந்­தமை பிராந்தியத்தில் பதற்ற நிலையை தோற்றுவித்திருந்த நிலையிலேயே  புட்டின் அமெரிக்காவுடன் ஆயுதக் களைவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தனது நாடு தயா ராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10