வித்­தியா கொலை வழக்கில் தலை­ம­றை­வான உதவி  பொலிஸ் ­ப­ரி­சோ­தகர் குறித்து விசா­ரணை நடத்த உத்­த­ரவு

Published By: Digital Desk 3

05 Jul, 2019 | 10:21 AM
image

(எம்.நியூட்டன்)

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா கொலை வழக்கின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யான சுவிஸ்­கு­மாரை விடு­வித்து உத­விய குற்­றச்­சாட்டு வழக்கில் இரண்­டா­வது சந்­தே­க­ந­ப­ரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரி­சோ­தகர் சிறி­கஜன் தலை­ம­றை­வா­கி­யுள்­ளமை தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு  குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­துக்கு யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றம் நேற்­று­முன்­தினம் உத்­த­ர­விட்­டது. 

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா சிவ­லோ­க­நாதன் படு­கொலை வழக்கின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யாக கூறப்­படும் சுவிஸ்­குமார் என அழைக்­கப்­படும் மகா­லிங்கம் சசிக்­குமார் என்­ப­வரை விடு­வித்து உத­வி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டில் வடக்கு மாகாண முன்னாள்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெய­சிங்க மற்றும் உபபொலிஸ் பரி­சோ­தகர் சிறி­கஜன் ஆகி­யோ­ருக்கு எதி­ராக யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் சட்ட மா அதி­பரால் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டது. சுவிஸ்­குமார் என்­ப­வரை சட்­ட­மு­றை­யற்ற வகையில் பொலிஸ் காவலில் இருந்து விடு­விக்க உத­வி­யதன் மூலம் தண்­டனைச் சட்டக் கோவை 209ஆம் பிரிவின் கீழ் தண்­டிக்­கப்­படக்கூடிய குற்­ற­மொன்றைப் புரிந்­தமை மற்றும் அதற்கு ஒத்­து­ழைத்ததன்  மூலம் 109ஆம் பிரி­வுடன் சேர்த்து வாசிக்­கப்­ப­ட­வேண்­டிய 209ஆம் பிரிவின் கீழான குற்­ற­மொன்றைப் புரிந்­தமை ஆகிய இரண்டு குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் இரு­வ­ருக்கும் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டது.

குற்­றப்­பத்­தி­ரி­கை­யில் ­பா­ரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராசா உள்­ளிட்ட 30 பேர் வரை சாட்­சி­க­ளாக இணைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த வழக்கு யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி அன்­ன­லிங்கம் பிரே­ம­சங்கர் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. 

முத­லா­வது சந்­தே­க ­நபர் வடக்கு மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெய­சிங்க முன்­னி­லை­யானார். 

இரண்­டா­வது சந்­தே­க­நபர் தொடர்ந்து தலை­ம­றை­வா­கி­யுள்­ளதால் அவர் மன்றில் முன்­னி­லை­யா­க­வில்லை. 

வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்­ட­வாதி மாதினி விக்­னேஸ்­வரன் முன்­னி­லை­யானார். முத­லா­வது சந்­தே­க­நபர் சார்பில் சட்­டத்­த­ரணி துஷித் ஜோன்சன் முன்­னி­லை­யானார்.  குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்­வாவும்  மன்றில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார்.

இரண்­டா­வது எதிரி எங்கே? அவர் தொடர்பில் தகவல் உண்டா? என்று வழக்குத் தொடு­ந­ரிடம் மன்று கேள்­வி­யெ­ழுப்­பி­யது.

“இரண்­டா­வது எதிரி சட்­ட­வி­ரோ­த­மாக நாட்­டை­விட்டு வெளி­யேறி வெளி­நாட்டில் உள்ளார் என்று பொலி­ஸாரால் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எனினும் அதன் உண்மைத் தன்மை தொடர்பில் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அவர் தொடர்­பான விசா­ர­ணை­களை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்­துள்­ளனர்” என்று அரச சட்­ட­வாதி மாதினி விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார். 

அத்­துடன், இந்த வழக்கை முன்­னெ­டுக்க சட்ட மா அதி­பரால் சிறப்பு அரச சட்­ட­வாதி நிய­மிக்­கப்­ப­டுவார்  எனவும் அரச சட்டவாதி மன்றுக்கு அறிவித்தார்.

இரண்டாவது எதிரி தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், வழக்கு விசாரணையை செப்டெம்பர் 27ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59