நீராவியடி பிள்ளையார் கோவிலை பௌத்த  மயமாக்குவது  நிலைமாறுகால நீதியா? : தவிசாளர் நிரோஷ் கேள்வி

Published By: R. Kalaichelvan

05 Jul, 2019 | 09:35 AM
image

இராணுவ மயமாக்கத்தின் மூலம் அபகரிக்கப்பட்ட நிலங்களில் பௌத்த சிங்கள மயமாக்கம் இடம்பெறுவதையா நிலைமாறுகாலம் என்றனர். 

பயன்படுத்தப்படும் அரசியல் கலைச்சொற்களுக்கும் செயற்பாட்டுக்கும் இடையில் எல்லாம் சுத்த சூனியமாகக் காணப்படுவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நேற்று  ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கும் முல்லைத்தீவு நிராவியடி பிள்ளையார் கோவில் மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஆக்கிரமிப்புக்களுக்கு உள்ளாகிவரும் தமிழரின் பூர்வீகக் கிராமமான தென்னைமரவாடி பகுதிகளுக்குச் சென்று அங்கு மக்கள் சந்திப்புக்களில் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துரைக்கையில்இ தமிழ் மக்களின் வரலாற்று ரீதியிலான நிலங்கள்இ பண்பாடுகள்இ கலாச்சாரம்இ இன ரீதியிலான இருப்புப் போன்றவை வெளித்தொடர்புகள் அற்ற பிரதேசங்களில் சாதாரணமாக அழித்துவிடுவதற்கான உத்திகள் இன்றும் தொடர்கின்றன.

 கடந்த காலத்தில் இராணுவம் கைப்பற்றி வைத்திருந்த நிலத்தினை உரியவர்களிடம் கையளிப்பதே நிலைமாறு காலநீதிக்குப் பொருத்தம். எனினும் இங்கிருக்கக் கூடிய இனவிரோத என்னப்பாடுடைய பௌத்த துறவிகள் முல்லைத்தீவு மற்றும் நாம் தற்போது வருகை தந்துள்ள தென்னைமரவாடி பிரதேசங்களில் கச்சிதமாக சிங்கள மயமாக்கத்தினையும் தமிழரின் வரலாற்று அழிப்பினையும் மேற்கொள்கின்றனர். 

மக்களைப்பொருத்தளவில் எமது நிலம் எமக்கே என்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றனர்.

 தமிழ் மக்களின் மரபுவழித்தாயகமான வடக்கினையும் , கிழக்கினையும் துண்டடுவதற்கான நுட்பமான காரியங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு இடம்பெறும் கீழ்த்தரமான காரியங்களை நோக்குகையில் போருக்குப் பின்பான நிலைமாறு கால நீதிக்குரிய காலப்பகுதியாக உயர் மட்டங்களில் கூறி வரப்படும் கருத்துக்களின் அடிப்படை என்ன எனக் கேட்கத்தோன்றுகின்றது.

தமிழரின் வரலாற்று பூர்வீக நிலத்தில் அமையப்பெற்ற நிராவியடி பிள்ளையார் கோவிலின் வளாகத்தினை பௌத்த வளாகமாக மாற்ற முயற்சிக்கப்படுகின்றது. இந்நிலையில் நீதித்துறையின் தீர்ப்பின் வாயிலாக மக்கள் தீர்ப்பினைப் பெறவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. இவற்றுக்கு மேலாக தென்னைமரவாடி பகுதியில் வரலாற்று ரீதியில் பரம்பரை பரம்பரையாக எம்மவர்கள் கந்தசாமி மலையில் வழிபட்டு வந்த வழிபாட்டுத்தலம் தொல்லியல் திணைக்கள ஆதிக்கத்தின் ஊடாக திரைமறைவில் சிங்கள பௌத்த மயமாக்கத்திற்கான கைங்காரியங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

தமிழ் மக்களின் இவ்வாறான வரலாற்றுக் கிராமங்களில் நிலங்கள் பொளத்த விகாரைகளுக்கும் சிங்களக்குடியேற்றத்திற்கும் புடுங்கி அல்லது அதிகாரத்தினைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றது. 

இதுதான் தொடர்கதையாகியுள்ள சூழ்நிலையில் நிலைமாறு காலம் எனவும் நல்லிணக்கம் எனவும் நாட்டில் கூறப்படுவதன் அடிப்படை எவருக்குமே புரியாத சூனியமாகக் காணப்படுவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58