ஒன்லைன் மூலம் உணவை வரவழைத்து சாப்பிடுவரா நீங்கள்...?

Published By: Digital Desk 4

04 Jul, 2019 | 09:35 PM
image

தற்போதுள்ள அவசரகதியில் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலும் ஒன்லைன் மூலம் உணவை வரவழைத்து சாப்பிடுகிறார்கள். எதிர்காலத்தில் இது கட்டாயமாக கூட ஆகலாம். இந்நிலையில் ஒன்லைன் மூலம் கிடைக்கும் உணவு ஆரோக்கியமானதா? அதனால் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் என்ன செய்வது? என்பதே தற்போது பெரும்பான்மையான கேள்வியாக இருக்கிறது.

நீங்கள் வரவழைக்கும் உணவை கரண்டியில் சாப்பிடாமல், கைகளால் தொட்டு சாப்பிடும் போது, கைகளில் நமைச்சல், எரிச்சல், அலர்ஜி, கைவிரல்களில் தொடு உணர்ச்சியின்மை, நகத்தில் எரிச்சல், மயிர்கூச்சம், வீக்கம் ஆகியவை ஏற்பட்டால்... அந்த உணவில் உங்களின் உடலுக்கு ஒவ்வாத பொருட்களின் சேர்க்கை இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சிலர் அதனை கைகளாலோ அல்லது கரண்டியிலோ வாயிலிட்டவுடன் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். நாக்கு மற்றும் உதடுகள் சிலருக்கு உணர்ச்சியிழக்கும். சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். பற்கூச்சம், சுவை அறிய முடியாத நிலை, தாடையை திடீரென்று அசைக்கமுடியாமல் இருத்தல்... போன்றவை ஏற்பட்டால் நீங்கள் சாப்பிடும் உணவில் ஏதேனும் விடப் பொருட்கள் கலந்திருக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பசியின் கோரபிடியில் இருக்கும் நீங்கள் அவசரகதியில் உணவை சாப்பிட்டு விட்டால், அதிக வியர்வை, மயக்கம், மயிர்க்கூச்சம், வாந்தி, எரிச்சல், உடலில் பல இடங்களில் புள்ளிகள் தோன்றுதல்... ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால், நீங்கள் சாப்பிட்ட கெட்டுப்போன அல்லது விடம் கலந்த உணவு இரைப்பையை அடைந்துவிட்டது என்று பொருள் கொள்ளலாம்.

சிலருக்கு வாந்தி பல நிறங்களில் உண்டாகும். சிறுநீர் பெருகும். பேதியும் உண்டாகலாம். அசிடிட்டி ஏற்படும் .உடல் சோர்வு உண்டாகும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால்.... நீங்கள் சாப்பிட்ட விடம் கலந்த அல்லது கெட்டுப்போன உணவு பெருங்குடலை சென்றடைந்து விட்டது என்று பொருள் கொள்ளலாம்.

இத்தகைய நிலையில் உடனடியாக அருகாமையில் இருக்கும் மருத்துவரை சந்தித்து, உங்களது அறிகுறிகளை தெளிவாக எடுத்துரைத்தால்.. அவர்கள் அதற்கான மருந்துகளையும், மாத்திரைகளையும் தந்து உங்களை குணப்படுத்துவார். அதற்கு பின் நீங்கள் ஒன்லைன் மூலம் உணவை வரவழைக்கும் முன் பல முறை யோசிப்பீர்கள். 

டொக்டர் சுவாமிநாதன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04