ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்கள் கண்டிக்கு செல்ல வேண்டாம்  : அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா 

Published By: R. Kalaichelvan

04 Jul, 2019 | 05:30 PM
image

(எம்.மனோசித்ரா)

முஸ்லிம் சமூகத்தின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்காகவே பொதுபல சேனா அமைப்பினால் எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டியில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்ட கிளை குற்றம் சுமத்தியுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

7 ஆம் திகதி  பொது பல சேனா அமைப்பு கண்டியில் மாநாடோன்றினை ஏற்பாடு செய்துள்ளமை அனைவரும் அறிந்த விடயமாகும். 

அந்த மாநாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.அத்தோடு இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பெறுமளவில் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இவ்வாறான திட்டங்களை முறியடிப்பதற்கு 7 ஆம் திகதி வரை நோன்பு நோற்று முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாப்பிற்காகவும் நாட்டில் சமாதானம் நிலவுவதற்காகவும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் சகல முஸ்லிம் மக்களிடமும் கோரப்படுகின்றது. 

மேலும் இந்த சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய தேவை இன்றி கண்டி நகருக்கு வருகை தருவதையும் , கண்டி நகர் ஊடாக பயணம் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08