மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்குக் கடிதம்

Published By: Vishnu

04 Jul, 2019 | 05:07 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்றுவரும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் தமக்குப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகக் கூறியிருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு, தன்னிச்சையானதும், சட்டத்திற்கு முரணனாதுமான கைது நடவடிக்கைகளைத் தடுப்பதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி பதில் பொலிஸ்மா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறது.

 

நம்பத்தகுந்த தகவல்கள், வல்லுனர்களின் அபிப்பிராயங்கள் மற்றும் நியாயமான சந்தேகங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே கைது நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்பதை உறுதிப்படுத்துமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றின் விபரம் பின்வருமாறு :

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர், அதனுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்காக உங்களுடைய திணைக்களத்தினால் விரைந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகளைப் பாராட்டுகின்றோம். தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பை முன்நிறுத்திய செயற்பாடுகள் நியாயமானவை எனும் அதேவேளை, பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் சரியான, நியாயமான சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

சட்டத்திற்கு முரணான கைது நடவடிக்கைகள் குறித்து அண்மையில் எமது ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் சில கைதுகள் கலாசார ரீதியிலான புரிந்துணர்வின்மை மற்றும் பொதுமக்களில் சிலர் வெளியிட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக பெண்ணொருவர் அணிந்திருந்த ஆடையில் காணப்பட்ட பூவேலைப்பாடு ஒன்றைக் காரணம்காட்டி கைது செய்யப்பட்டார். அதேபோன்று அராபிய மொழியில் கருத்துக்களைப் பதிவிட்டிருந்த சில நபர்களும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பின்னரே பொலிஸாரால் அதுகுறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன என்றும் எமக்கு அறியக்கிடைத்துள்ளது.

எனவே இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கு சில ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09