பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்மாதத்திலிருந்து  50 ரூபா மேலதிக கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்போம் : திகா, ரவி கருணாநாயக்க வாக்குறுதி

Published By: R. Kalaichelvan

04 Jul, 2019 | 03:15 PM
image

(நா.தனுஜா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா மேலதிக கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்காமல் மலையக மக்களை நாங்கள் ஏமாற்றிவிட்டோம் என்று சிலர் கூறுகின்றனர்.

நாங்கள் தொடர்ந்தும் மக்களின் நலன்கருதியே செயற்பட்டு வருகின்றோம். அந்தவகையில் அமைச்சரவையில் அனுமதிபெற்று இம்மாதத்திலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்று அமைச்சர்களாக பழனி திகாம்பரம் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் தெரிவித்தனர்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 75 இளைஞர், யுவதிகளுக்கு பெருந்தோட்ட சமூகத்தொடர்பாடல் வசதியளிப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மின்சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்துகொண்டார். 

நிகழ்வில் உரையாற்றிய மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கூறியதாவது: 

அரசின் அபிவிருத்தி செயற்திட்டங்களை சமூகத்தின் அடிமட்டம் வரை கொண்டு செல்லும் நோக்கில் மலையக இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கி இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நாட்டில் மலையக மக்களே அடிப்படை வசதிகள், தொழில்வாய்ப்பு, வாழ்வாதாரம் என அனைத்து விதங்களிலும் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள். அந்த மக்களுக்கு அனைத்து விதங்களிலும் எம்மாலான சேவைகளை, அபிவிருத்தித் திட்டங்களை, வசதிகளை செய்துகொடுத்து வருகிறோம். 

எனினும் நாங்கள் 50 ரூபா கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக சில காட்டிக்கொடுக்கும் நபர்கள் கூறுகிறார்கள். நானும், அமைச்சர் மனோகணேசனும் இணைந்து பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான 50 ரூபா மேலதிக கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்போம். 

அதுகுறித்து வேறு எவரும் உரிமைகோர முடியாது. அதேபோன்று எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யாரை வேட்பாளராகக் களமிறக்கினாலும் அவருக்கு ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதுடன், அரசாங்கத்துடன் இணைந்து மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதை முன்னிறுத்தி செயற்படுவோம் என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33