அதிகாரப்பகிர்வினூடாகவே தேசிய ஒற்றுமையை உருவாக்க முடியும்  - கிரியெல்ல 

Published By: Vishnu

04 Jul, 2019 | 02:16 PM
image

(நா.தினுஷா)

நாட்டின் முன்னேற்றாத்துக்கு தேசிய ஒற்றுமைய கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும். அதிகாரப் பகிர்வொன்றினூடாகவே தேசிய ஒற்றுமையை உருவாக்க முடியும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

கண்டி, பதி உதின் மகளிர் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர்  இதனை தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் தமது அதிகாரப் போராட்டத்துக்காக இனங்களுக்கு இடையில் இருந்த  ஒற்றுமையை சீர்குழைத்து விட்டனர். அரிசியலமைப்பு உருவாக்கப்பட்டபோதே மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டிருக்குமாக இருந்தால் தற்போதுள்ள பிரச்சினைகள் நாட்டில் ஏற்பட்டிருக்காது.  

நாட்டின் முன்னேற்றத்துக்கு தேசிய ஒற்றுமை அவசியமானதாகும்.  சகலரும் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை ஒவ்வொருவரும்  உணர வேண்டும். அதனை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.  அனைவரும் நாட்டின் ஒற்றுமை பற்றி சிந்திப்பது அவசியமாகும்.

16 ஆம் நூற்றாண்டு காலப்பகதிகளிலேயே முஸ்லிம் இனத்தவர்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்காக புத்தளம், பேருவல போன்ற பகுதிகளில் குடியேறினார். அன்று அவர்களக்கு எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை என்றும் வரலாற்றில் சிறுப்பான்மையினருக்காக முன்னுரிமை முறையாக வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58